வானம் பெற்றெடுத்த
தண்ணீர் குழந்தை
இழையில் விளையாடு
மண்ணில் உறங்கும் வரை
2011, ஜூன் மாதம் 14ம் தேதி எழுதியது
Advertisements
நிராகரிப்பு
2011, மே மாதம் 21ம் தேதி எழுதியதுவார்த்தைக்கு வழி இல்லாமல்
மௌனத்தில் மொழி இல்லாமல்
உள்ளம் உடைந்து அழுகிறது
குழந்தைக்கு பிடிக்காத பொம்மை
2011, மே மாதம் 7ம் தேதி எழுதியது
சின்ன சின்ன கனவுகளில்
கடவுள் அவதரிக்கிறார்
விதியென்னும் ஒரு உளியை கொண்டு
அவரை கல்லாய் மாற்றி விடுகிறோம்
காத்திருக்கும்… கண்ணீர் இல்லை…
2011, ஏப்ரல் மாதம் 23ம் தேதி எழுதியது2011, ஏப்ரல் மாதம் 18ம் தேதி எழுதியது
வாழ்க்கையில்
வீழ்வதற்கு காரணம்
தோன்றாமல் போன
சிந்தனைகளல்ல
தோன்றி முடக்கப்பட்ட
சிந்தனைகள்
முதுமை
2011, ஏப்ரல் மாதம் 14ம் தேதி எழுதியதுநாளை நாளை என்று
ஓடுபவர்களின் நடுவே
நேற்றை தவிர
வேறேதும் இல்லாதவர்களால்
உள்ளம் உருமாறும்
இரட்டை கண்ணீர்
2011, ஏப்ரல் மாதம் 13ம் தேதி எழுதியதுஒரு விழியின் நீரால்
துயரை மறக்க வைத்தாய்
ஏன் இறைவா
மறு விழியின் நீரால்
உரியை எரிக்க வைத்தாய்
ஏன் இறைவா
குழந்தை
2011, ஏப்ரல் மாதம் 10ம் தேதி எழுதியதுஉறவுகளின்
மனக்குறைகளை
பற்றில்லாமல்
கேட்டு தீர்க்கிறது
குட்டி கடவுள்
தண்டனை
2011, ஏப்ரல் மாதம் 6ம் தேதி எழுதியதுநிகழ்காலத்தை தவிர
எல்லாம் பொய் என்றால்
பொய் சொல்பவனுக்கு
எதற்கு தண்டனை?