Archive for the ‘மௌனம் – தெளிவு’ Category

பாதை – V

2010, ஒக்ரோபர் மாதம் 23ம் தேதி எழுதியது

நிறங்களில் பாதி
நிழல்களில் பாதி
தொடரும் ஒரு வாழ்க்கை
பகலவன் பிரிந்தால்
நிலவொளி போதும்
தெரியும் என் பாதை

நாளையும் ஒரு நான்

2010, ஜூன் மாதம் 20ம் தேதி எழுதியது

இன்றொரு பிறப்பில் நான்
இன்றே வாழ்கிறேன்
இன்று நான் பார்த்த என்னை
நாளை நான் சந்திக்க மாட்டேன்

வாழ்க்கை பாதை

2010, மே மாதம் 27ம் தேதி எழுதியது

வழிகள் மாறாமல் என்னை
அழைத்து செல்லும் இறைவன்
வலிகள் ஆறாமல்
கை பிடித்து செல்லும்
பிள்ளை நான்

உயிரில் வெளிச்சம் – X

2010, ஏப்ரல் மாதம் 10ம் தேதி எழுதியது
உலகம் அது கடலானது
என் கனவில் அது துளியானது
கடவுளும் கண்டார் கனவல்லவா
அதில் நானும் ஓர் துளியல்லவா

அறிதல்

2010, மார்ச் மாதம் 20ம் தேதி எழுதியது
நண்பர்கள்
சிரிக்க வைத்து
சொல்கிறார்கள்
நான் யாரென்று
 
தாயும்
நினைக்க வைத்து
சொல்கிறார்
நான் யாரென்று
 
கடவுள் மட்டும்
என்னை அழவைத்தே
சொல்கிறார்
நான் யாரென்று

உயிரில் வெளிச்சம் – VII

2010, பிப்ரவரி மாதம் 7ம் தேதி எழுதியது
வானம் என்னுள்
விரிந்தது விண்ணே
உன் வெண்ணிலவு எனக்கு
தேவை இல்லை
என் நிலவை நீ
பறித்து சென்றால்
உன்னையும் கடப்பேன்
அந்நிலவை தேடி

அர்த்தங்கள்

2010, ஜனவரி மாதம் 14ம் தேதி எழுதியது

கனவகளுக்கு
அர்த்தங்கள் தேடி தேடி
எத்தனை முறை தொலைந்தேன்
அர்த்தம் காண்பதே
கணவாய் ஆனதால்
எத்தனை முறை பிறந்தேன்

உயிரில் வெளிச்சம் – VI

2010, ஜனவரி மாதம் 10ம் தேதி எழுதியது

தோற்றங்களால் தொலையாதே
அது மனதில் விரியும்
தூரிகை சாயல்களே

மாற்றங்களால் மயங்காதே
அது காலம் பரப்பும்
மாயக் கதிர்களே

சீற்றங்களால் சிதராதே
அதில் பொறுமை கற்றால்
சிறு கல்லும் கரையாதே

பொய்யில் என்றும் பறவாதே
அதில் நீயும் கலந்தால்
பொழுதும் உன்னை பிடியாதே

மெய்யை மட்டும் மறவாதே
நீ நிலைக்கும் வரை
வேறேதும் உனக்காய் நிலையாதே

விடை

2010, ஜனவரி மாதம் 3ம் தேதி எழுதியது

விடைகள் தேடும்
பயணம் முடிந்தது
நானே இங்கு
விடையாகி போனேன்

உயிரில் வெளிச்சம் – I

2009, திசெம்பர் மாதம் 12ம் தேதி எழுதியது

அலைகள் என்னை
அடித்தாலும் என்ன
சமுத்திரத்தில் நான்
கலந்து விட்டேன்
இனி புயலே வந்து
சிதைத்தாலும் என்ன
காற்றோடு நான்
பறந்து விட்டேன்