Archive for the ‘மௌனம் – சிரிப்பு’ Category

எங்கள் வாழ்வின் நவரசம்

2008, திசெம்பர் மாதம் 7ம் தேதி எழுதியது

என் 100 வது கவிதை – எங்கள் வீட்டு கவிதை(ரீமா)க்கு இது சமர்ப்பணம்

ஆச்சர்யம்

உன் விரல் அசைவு முதல்
விழி அசைவு வரை
தினமும் புதிதாய் தோன்றுகிறாய்

பயம்

காற்றுக்கு கூட
காவல் வைப்போம்
உன்னை தீயவை
அண்டாமல் இருக்க

கருணை

பலன் ஏதும் இல்லாமல்
உன் மேல் அன்பு செலுத்தியதால்
அனைத்து உயிர்களுக்கும்
கருணை காட்டி பழகினோம்

கோபம்

உன் உறக்கத்தை களைத்த
ஒலிகள் மீதும்
இசையின் மீதும் கூட
எங்கள் கோபம்

சாந்தம்

இமைகள் மூடிய உன் முகம்
சாந்தமாக்கும்
ஆயிரம் புயல்களை

சோகம்

உன்னை சூழ்ந்த
கண்களை கண்டு அழுகும்
தொலைக்காட்சி பெட்டி

அன்பு

நாங்கள் உனக்கு சொல்ல
ஆயிரம் வார்த்தைகள் புதிதாய்
நீ எங்களுக்கு சொல்ல
உன் சிரிப்பு மட்டும்

வீரம்

உன் முகத்தில் அச்சம் தவிர்க்க
வானை வீழ்போம்
கண்மணியே

ஆனந்தம்

நீ எங்கள் வாழ்வில்
வார்த்தைகளில்
செய்கைகளில்
இருக்கும் ஒவ்வொரு நொடியும்

மழலையின் சிரிப்பு

2008, ஒக்ரோபர் மாதம் 16ம் தேதி எழுதியது

பதிவாகும் என
அறிந்து மலர்ந்தோம்
புகைப்படத்தால்
சிரிப்பிற்க்கு அழகு

எதுவாகும் என
அறியாமல் மலர்ந்தாய்
உன் சிரிப்பால்
புகைப்படத்திற்கு அழகு

இறைவன்

2007, ஜனவரி மாதம் 26ம் தேதி எழுதியது

நடுங்க வைக்கும் பணியில்
முட்டி மோதிக்கொண்டு
இறைவனின் தரிசனம் வாங்க
கால் வலிக்க நிற்க்கும்்
பக்தர்கள் அறியவில்லை
அந்த நெரிசலிலும்
எங்கேயோ பார்த்து கொண்டு
சிரிக்கும் குழந்தையின் கண்களில்
ஒளிந்து இருந்தான் இறைவன்