Archive for the ‘மௌனம் – கனவுகள்’ Category

2010, ஜூன் மாதம் 4ம் தேதி எழுதியது

பிறப்போம் விதையாக
கற்ப்போம் மழலையாக
வளர்வோம் இசையாக
எழுவோம் கடலாக
விழுவோம் மழையாக
வாழ்வோம் வானாக
பிரிவோம் முகிலாக

காற்றின் பிள்ளை

2010, பிப்ரவரி மாதம் 19ம் தேதி எழுதியது
பூக்களை நீ
தீண்டினாய் அம்மா
நானும் தீண்டினேன்
என்னை மட்டும்
முட்கள் தீண்டுவதேன்
 
தென்றலாய் நீ
மாறி போனாய் அம்மா
நானும் மாற நினைத்தேன்
என்னை மட்டும்
கற்கள் அடிப்பதேன்
 
பூமி எல்லாம் நீ
பரவி இருக்கிறாய் அம்மா
நானும் பரவ நினைத்தேன்
என்னை மட்டும்
சுவர்கள் தடுப்பதேன்
 
பிறக்கவில்லையே அம்மா
காற்றாய் நானும்
உன் தத்துப்பிள்ளையா நான்
உன்னில் என்னை உணர்ந்து பார்க்கிறேன்
ஒரு நாள் என்னை
பெற்றெடுப்பாய் என்றே
என்னக்குள் நானே பறந்து பார்க்கிறேன்

தேடல் – X

2010, ஜனவரி மாதம் 28ம் தேதி எழுதியது

நிலவும் ஒரு நாள்
தேய்ந்து போகும்
உறக்கம் தேடி
கண்கள் காத்திருக்கும்
தேயாத கனவுடன்
நிலவை தேடி

மேகம்

2009, ஒக்ரோபர் மாதம் 3ம் தேதி எழுதியது

சிதறி போகும்
மேகக்கூட்டம்
மறவாது
திசையை மட்டும்
அந்த மேகத்தில்
நானும் கொஞ்சம்
கலந்து விடவே
கண்கள் வேண்டி நகரும்

கனவு – X

2009, ஜூலை மாதம் 16ம் தேதி எழுதியது

கனவே கனவே
கணவாய் பிறந்தாயே
கனவில் கூட
கணவாய் பிரியாதே

கனவு – VIII

2009, ஜூன் மாதம் 20ம் தேதி எழுதியது

கனவை கேட்டதும்
கிண்டல் கலந்த அன்புடன்
சிரித்த அம்மா

கனவெல்லாம் பொய்யென்று
யதார்த்த பாடம்
கற்பித்த அப்பா

கனவை சொன்னதும்
விளக்கம் சொல்லி
பயமுறுத்திய அக்கா

கனவை விவரிக்க
அகன்ற விழிகளுடன்
கேட்ட தங்கை

அடுத்த முறை
ஊர் செல்லும் வரை
கேட்டு உணருமா
இந்த காற்று
அவர்களும்
கனவானதை

இன்றும் நலம்

2009, மார்ச் மாதம் 9ம் தேதி எழுதியது

விடியல் வந்தது
விழி வைத்தும்
சிரிப்பு காற்றில்
செவி வைத்தும்
தேவை கண்டே
குரல் வைத்தும்
குணம் உணர்ந்தே
மனம் வைத்தும்
இன்றும் என்னில்
என்றும் நலம்
விழியொன்றை
செவியொன்றை
குரலொன்றை
மனமொன்றை
காணாமல்
வைக்கத்தான்
காத்திருந்த
கனவுகள் கோடி

கனவு – IV

2009, மார்ச் மாதம் 1ம் தேதி எழுதியது

கண் திறந்து கண்டதெல்லாம்
கனவென போகாதோ
கண்மூடி கண்டதெல்லாம்
நிஜமென மாறாதோ

கனவு – III

2009, பிப்ரவரி மாதம் 15ம் தேதி எழுதியது

தென்றல் வருடவே
மண்வாசம் பரவவே
பூக்கள் விழிக்கவே
கணுக்கள் சிலிர்க்கவே
சிறுகுயில் குரலிலே
என் இளவெயில் கனவிலே

கனவு – II

2009, பிப்ரவரி மாதம் 3ம் தேதி எழுதியது

நீர் நிலம் காட்சி
யாவும் இன்று மறையும்
கரைத்த மனதில் கனவாக