Archive for the ‘மௌனம் – ஆச்சர்யம்’ Category

ஒன்றும் இல்லாத வானம்

2010, ஜூலை மாதம் 30ம் தேதி எழுதியது

மேகங்கள் வரவே
காத்து நின்ற போதும்
பூமிக்கு காவல் நின்ற தாய்
ஒன்றும் இல்லாத வானம்

Advertisements

சிரிக்கும் கைதி

2010, மே மாதம் 16ம் தேதி எழுதியது

மனிதம் முழுதும்
போற்றினால் என்ன
உலகம் எல்லாம்
நேசித்தால் என்ன
வாழ்வுக்கு தூணாய்
நின்றாலும் என்ன
பிரபஞ்சம் காக்கும் இறைவனை
சிறைக்குள் பூட்டிச் சென்றார் பூசாரி

உயிர்

2010, மே மாதம் 1ம் தேதி எழுதியது
அன்பில் கலக்கும்
நெஞ்சங்கள் கொஞ்சம்
 
இல்லாத மெய்களின்
வஞ்சம் கொள்ளும் நெஞ்சம்
 
கண்ணீர் பேசும்
ஊமை மனமும்
 
தேடல் சொல்லும்
உண்மை விழியும்
 
ஏதும் சொல்லா
தொடரும் முகங்களும்
 
ஏதும் அறியா
நகரும் உயிர்களும்
 
புரியாத மொழிகளில்
காற்றும் கடலும்
 
செவிக்காத மொழிகளில்
வானும் மண்ணும்
 
யாதிலும் தோன்றும் தோற்றம்
மாற்றில்லா ஓருயிர் ஓட்டம்

இசை

2010, மார்ச் மாதம் 25ம் தேதி எழுதியது
மனதை வருடி
தாலாட்டும்
தாயும் நீயே

எழுந்து நிமிர
தோள் கொடுக்கும்
தோழனும் நீயே
 
வாகன ஓசைகளுடன்
பொழுதின் ஒலிகளுடன்
நீ காணும் போராட்டங்கள்
அறியாமல் போவேனோ
 
என் செவி சொல்லாமலே
உன்னிடம் விடை காண
நீ காணும் ஏக்கங்கள்
புரியாமல் போவேனோ
 
மண்ணை கண்டால்
ஏனோ நினைவுகளை
எரிக்க வைக்கிறாய்
 
விண்ணை கண்டால்
என்னையும் உன்னுடன்
பறக்க வைக்கிறாய்
 
பிரியாதே என் உயிரை
மீண்டும் மீண்டும் நீயே
பிறக்க வைக்கிறாய்

முடிவு

2010, ஜனவரி மாதம் 3ம் தேதி எழுதியது

வெற்றியை தேடி ஓடும் மனிதன்
வெற்றிக்கும் அளவுகோல் விதிக்கிறான்
இது எங்கு முடியும் என்று கேட்டால்
கடவுளும் கையை விரிக்கிறான்

2009, நவம்பர் மாதம் 13ம் தேதி எழுதியது

கடவுள்
எல்லா இடங்கிளிலும்
இருக்க முடியாதென்று
அம்மாவை படைத்தார்
கடவுள்
எல்லோருக்கும் வாழ்க்கையை
கற்று தர முடியாதென்று
பிள்ளைகளை படைத்தார்

சப்தம்

2009, நவம்பர் மாதம் 8ம் தேதி எழுதியது

அம்மா உறங்கும் இரவில்
காற்றில் ஏதோ சப்தம்

அம்மா எந்தன் அருகில்
செவிக்கு புரியாத சப்தம்

பேயோ ஆவியோ இருக்காது
எனக்கு பயம் தராத சப்தம்

அம்மா உறங்குவதால் இருக்காது
அது குழப்பம் தந்த சப்தம்

எந்த பொருளும் தென்படவில்லை
மௌனத்தால் கொன்ற சப்தம்

அம்மாவின் முகத்தை
கூர்ந்து பார்த்தேன்
புரிந்தது
சப்தத்தின் மூலம்
நான் தான் என்று

அம்மாவின் உள்ளே
நான் உறங்கிய போது
நான் போட்ட சப்தம்
அது
என் ஆன்மாவின் சப்தம்

ஆசை

2009, ஒக்ரோபர் மாதம் 23ம் தேதி எழுதியது

கூடு கட்ட
எண்ணம் இல்லாதவன்
பறவையாய் வாழ
ஆசைப்படுகிறான்

விழிகள் அறியாத புன்னகை

2009, ஜூன் மாதம் 27ம் தேதி எழுதியது

பார்ப்பவர் அறியவே
சிரித்து பழகியதில்லை என்று
இருள் படியும் உன்
கண்களின் முன்னே
மலர்ந்த புன்னகையால்
அறிந்து கொண்டேன் இன்று

எங்கள் வாழ்வின் நவரசம்

2008, திசெம்பர் மாதம் 7ம் தேதி எழுதியது

என் 100 வது கவிதை – எங்கள் வீட்டு கவிதை(ரீமா)க்கு இது சமர்ப்பணம்

ஆச்சர்யம்

உன் விரல் அசைவு முதல்
விழி அசைவு வரை
தினமும் புதிதாய் தோன்றுகிறாய்

பயம்

காற்றுக்கு கூட
காவல் வைப்போம்
உன்னை தீயவை
அண்டாமல் இருக்க

கருணை

பலன் ஏதும் இல்லாமல்
உன் மேல் அன்பு செலுத்தியதால்
அனைத்து உயிர்களுக்கும்
கருணை காட்டி பழகினோம்

கோபம்

உன் உறக்கத்தை களைத்த
ஒலிகள் மீதும்
இசையின் மீதும் கூட
எங்கள் கோபம்

சாந்தம்

இமைகள் மூடிய உன் முகம்
சாந்தமாக்கும்
ஆயிரம் புயல்களை

சோகம்

உன்னை சூழ்ந்த
கண்களை கண்டு அழுகும்
தொலைக்காட்சி பெட்டி

அன்பு

நாங்கள் உனக்கு சொல்ல
ஆயிரம் வார்த்தைகள் புதிதாய்
நீ எங்களுக்கு சொல்ல
உன் சிரிப்பு மட்டும்

வீரம்

உன் முகத்தில் அச்சம் தவிர்க்க
வானை வீழ்போம்
கண்மணியே

ஆனந்தம்

நீ எங்கள் வாழ்வில்
வார்த்தைகளில்
செய்கைகளில்
இருக்கும் ஒவ்வொரு நொடியும்