Archive for the ‘மௌனம் – அதிர்ச்சி’ Category

வியாபாரம் – II

2009, ஜூன் மாதம் 21ம் தேதி எழுதியது

மருத்துவமனையில் இருந்த
சாமி சிலையும்
ஊமையாய் பார்த்தது
உயிர் காக்கும் சேவகனும்
இன்று வியாபாரம் செய்கிறான்

Advertisements

சாபம்

2009, ஏப்ரல் மாதம் 19ம் தேதி எழுதியது

மழை இரவுகள்
பாடிய தாளங்களை
முழுங்கி கொண்ட
வாகனங்கள் ஏற்றது

ஜன்னல் நிலவை
கவிதைகள் மட்டும் பாட
பார்வையை மறைத்த
சுவர்கள் ஏற்றது

அந்த ஊமை மண்ணும்
பேசும் மொழிகள்
கண்மூடியும் கேட்காமல் போக
இந்த பூமி ஏற்றது

ஆற்றங்கரை நீரை
கானல் பிழையாக செய்த
தண்ணீர் குவளைகளுக்கு
நகரமே ஏற்றது

ஏதேதோ வடிவங்களில்
இன்னும் ஏற்க வரும்
எங்கள் இயற்க்கை சாபங்களை
பல செயற்க்கை சாபங்கள்

ஏற்ற பிழைப்பை
குறை சொல்லித்தான்
வார்த்தையில்லாமல்
இம்முறையும்
ஊருக்கு கிளம்பியது
நாளை அம்மாவிடம்
சேரப்போகும் கடிதம்

கானல் கனவுகள்

2009, ஏப்ரல் மாதம் 16ம் தேதி எழுதியது

பாலைவனத்தில்
கானலை கண்டே
என்னுடன் நானில்லை
விதைத்தேன் கனவு மட்டும்

கானல் தெளிய
அழிவின் பிடியில்
என்னுடன் கனவில்லை
விழித்தேன் நான் மட்டும்

விளம்பரம்

2008, நவம்பர் மாதம் 16ம் தேதி எழுதியது

பொருள்…
உடை…
உணவு…
அறிவு…
திறமை…
வெற்றி…
காற்று…
நீர்…
விளம்பரம் வேண்டிய
பட்டியலில் சேர்ந்தது
அன்பு