Archive for செப்ரெம்பர், 2011

2011, செப்ரெம்பர் மாதம் 23ம் தேதி எழுதியது

வானின் வண்ணங்கள்
மாற்றம் காணும் தருணங்கள்
தெரியாமலே போவதைப்போல்
சில பயணங்களும் சில தருணங்களில்
தெரியாமலே முடிந்து விடுவதுண்டு
முடிந்து போன பாதைகளை
தேடி ஓடாதீர்கள்
அங்கே காத்திருப்பது
சுவடுகள் மட்டுமே

நேர்மை

2011, செப்ரெம்பர் மாதம் 17ம் தேதி எழுதியது

உடைந்த போதும்
மேகங்கள்
திசை மாற்றி போவதில்லை

முகவரி

2011, செப்ரெம்பர் மாதம் 6ம் தேதி எழுதியது

சாலையோரம்
முகவரி தொலைத்த முகங்கள்
புன்னகையில் மலரும் பொழுது
தெரிகிறது
மகிழ்ச்சியின் முகவரி

தடங்கல்

2011, செப்ரெம்பர் மாதம் 2ம் தேதி எழுதியது

இலையில் சிக்கி தவிக்கும்
துளிக்கு தெரியாது
இன்னும் சில நொடிகள்
கரையாமல் வாழ்வோம் என்று