Archive for ஜூன், 2011

2011, ஜூன் மாதம் 24ம் தேதி எழுதியது

தன்னம்பிக்கை
தடைகளை உடைக்கவே
இதயங்களை அல்ல!

2011, ஜூன் மாதம் 22ம் தேதி எழுதியது

உங்கள் காட்சிப்பிழைக்கு
பலியாகும் நாங்கள் வாழ
கேட்டு நிற்கிறோம்
உங்கள்
ஒரு நொடியை மட்டும் –
அழகில்லாத உலகம்

காலம்

2011, ஜூன் மாதம் 22ம் தேதி எழுதியது

என்றும் விடியும் இன்றொன்றில்
நாளை என்பது வினாவே
அதை தேடி ஓடும் உன் காலங்களும்
நேற்றானபின் கனாவே

காட்சி

2011, ஜூன் மாதம் 15ம் தேதி எழுதியது

நிகழ்வது உன் விழியில்
நிகழ்ந்த பின் அதற்குள்
கணவாய் சென்று மறையாதா
இன்னொரு விழியில்
மெய்யல்ல நீயும்
கணவாய் மறைவாய் தெரியாதா

2011, ஜூன் மாதம் 14ம் தேதி எழுதியது

வானம் பெற்றெடுத்த
தண்ணீர் குழந்தை
இழையில் விளையாடு
மண்ணில் உறங்கும் வரை