Archive for மார்ச், 2011

2011, மார்ச் மாதம் 27ம் தேதி எழுதியது

திறந்த வெளியில் பறந்து விட்டு
அவ்வவரின் குறுகிய உலகுக்குள்
வந்து சேர்கிறார்கள்
குழந்தை உறங்கிய பின்பு

Advertisements

துணிச்சல்

2011, மார்ச் மாதம் 19ம் தேதி எழுதியது
வானவில் வண்ணங்களோ
எழுந்து வந்த எண்ணங்களோ

வெறும் பிம்பம் என்று சொல்லி
மறுபக்கம் செல்பவர்கள்
அறிவாளிகள் இல்லை
கோழைகள்

சொந்தம்

2011, மார்ச் மாதம் 16ம் தேதி எழுதியது
பூமியில்
ஒரு துகள் மண் கூட
கேட்காமல்
உலகை நமதாக்குவோம்
விண்ணில்
ஒரு மேகப்பஞ்சை கூட
வாங்காமல்
வானை கையில் அடைப்போம்