Archive for நவம்பர், 2010

2010, நவம்பர் மாதம் 28ம் தேதி எழுதியது

வெற்றியில் பெரிது
இயலாமையை வென்றெடுப்பது
தோல்வியில் பெரிது
இயலாமையே நிலையென்று நம்புவது

Advertisements

2010, நவம்பர் மாதம் 27ம் தேதி எழுதியது
இரவினில் தொலைத்த வழியிலே
ஒலி மட்டும் தங்கும் விழியிலே
தாலாட்டு சொல்ல நிலவில்லை
விடிந்த பின் நிலவில் சுவையில்லை

பாடம்

2010, நவம்பர் மாதம் 26ம் தேதி எழுதியது
வானமது கனவென்று தெரிந்தும்
நின்றதில்லையே கண்கள்
நேசமது பொய்யென்று புரிந்தும்
மறந்ததில்லையே நெஞ்சம்
பாடங்கள் என்று ஆயிரம்
வந்து வந்து ஓடி போனது
இதயம் என்பது ஒன்று தானே
கற்று கற்று சலித்து போனது

2010, நவம்பர் மாதம் 19ம் தேதி எழுதியது

நான் கரிப்பொருள் இல்லை
உஷ்ணத்தில் எரிந்து
வைரமாய் மாற

நான் கல்லும் இல்லை
அடிகள் தாங்கி
சிலையாய் மாற

நான் விதையும் இல்லை
உடைந்த பின்னே
பூவாய் மலர

கொஞ்சம் கண்ணீர்தான்
சிந்திவிட்டேன்
நான் கோழை இல்லை

உயிரில்லா உருவங்கள் தாங்கும்
வழிகள் கொள்ளும் சக்தி
என் உயிரில் இல்லை

தற்காலிக நேசம்

2010, நவம்பர் மாதம் 14ம் தேதி எழுதியது
காலை
பிரியும் நிலவுக்கும்
நாளை
பிரியும் உறவுக்கும்
ஒரே விதி
அன்பு கிடைக்கும் வரை
அன்பு கொடு

2010, நவம்பர் மாதம் 14ம் தேதி எழுதியது

இன்று காலை ஒரு நண்பர் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தன் அம்மாவை பற்றி ஒரு மனதை உருக்கும் இடுகையின் இணைப்பை பகிர்ந்து கொண்டார்.

அம்மா என்று ஒருவர் இல்லாமல் நம் குழந்தை பருவம் முழுமை அடைந்திருக்காது. கருவில் உருவான நாளில் இருந்து நம்மை பராமரித்து, அவர் பசி கொண்டாலும் பசி என்றால் என்னவென்றே தெரியாமல் நம்மை வளர்த்து, தினம் மாலை நம் வருகைக்காக காத்திருந்து, நம் சின்ன சின்ன வெற்றிகளுக்காக வேண்டி… அம்மாவின் குணங்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது – உணர மட்டுமே முடியும்!

இன்று நம் அம்மாவிடம் நன்றி சொல்வோம். குழந்தைகள் தினம் குழந்தை பருவத்தை கொண்டாட மட்டுமில்லை. அதை சாத்தியமாக்கிய ஜீவனையும் கொண்டுவோம்.

தன் இடுகையை பகிர்ந்து கொண்ட நண்பர் சில்வியனுக்கு நன்றி!

காலம்

2010, நவம்பர் மாதம் 14ம் தேதி எழுதியது
இந்நாள் விடிவோ
இந்நாள் கனவோ
எந்நாள் வருகையிலும்
தொடர்கிறது வாழ்க்கை

திரைக்கு பின் ஒரு உலகம்

2010, நவம்பர் மாதம் 13ம் தேதி எழுதியது
வெள்ளந்தி உலகம் கண்ட
கண்ணுக்குள் இன்று

புதுமைகள் இல்லாத
விடியல்கள்
முடிவுகள் தெரியாத
தேடல்கள்

பொறுப்புகள் வேண்டாத
இலக்குகள்
தவறுகள் புரியாத
வழக்குகள்

குணங்கள் புரியாத
தன்மைகள்
விழிநீர் சொல்லாத
உண்மைகள்

கனவில் பிறந்தது
நிஜத்தில் நிறைந்தது
எண்ணம் என்னும் மாயத்திரை