Archive for ஒக்ரோபர், 2010

பாதை – V

2010, ஒக்ரோபர் மாதம் 23ம் தேதி எழுதியது

நிறங்களில் பாதி
நிழல்களில் பாதி
தொடரும் ஒரு வாழ்க்கை
பகலவன் பிரிந்தால்
நிலவொளி போதும்
தெரியும் என் பாதை

ஆசை

2010, ஒக்ரோபர் மாதம் 18ம் தேதி எழுதியது

கைகளுக்கும்
வயிற்றுக்கும்
நடந்த போராட்டத்தில்
பொம்மை விற்கும் சிறுவன்

கேள்விகள்

2010, ஒக்ரோபர் மாதம் 18ம் தேதி எழுதியது

உறவுகளிடம்
உணர்வுகளிடம்
கனவுகளிடம்
கடவுளிடம்
பாடம் கற்க நேரமில்லை
பதிலை தேட தோன்றவில்லை

நேரம்

2010, ஒக்ரோபர் மாதம் 2ம் தேதி எழுதியது

சூரியனின் ஏற்றம் இறக்கம்
இணைந்தால் பிறப்பது நேரம்
விதியின் ஏற்றம் இறக்கம்
இணைந்தால் பிறப்பது வாழ்க்கை