Archive for ஓகஸ்ட், 2010

காலம்

2010, ஓகஸ்ட் மாதம் 28ம் தேதி எழுதியது

உயிரின் அதிர்வுகள் அதை
காலம் என்றும் பிரியாது
காலம் என்றொரு மாயம் அதை
உயிர் என்றும் அறியாது

அஹிம்சை

2010, ஓகஸ்ட் மாதம் 16ம் தேதி எழுதியது

ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னம் காட்டு
அஹிம்சை வழி
பழகி பழகி தோற்கிறார்
மழலையின் தந்தை

கூண்டுக்குள் வானம்

2010, ஓகஸ்ட் மாதம் 15ம் தேதி எழுதியது

கூண்டை விட்டு வானை தொட
பறவைகளின் கனவு
கூண்டுக்குள்ளே வானம் செய்ய
மனிதர்களின் கனவு