Archive for ஜூலை, 2010

ஒன்றும் இல்லாத வானம்

2010, ஜூலை மாதம் 30ம் தேதி எழுதியது

மேகங்கள் வரவே
காத்து நின்ற போதும்
பூமிக்கு காவல் நின்ற தாய்
ஒன்றும் இல்லாத வானம்

Advertisements

வெளி வேஷம்

2010, ஜூலை மாதம் 24ம் தேதி எழுதியது

யாரோ அது எனக்குள்ளே
பூக்களை கண்டு நிற்கிறார்
யாரோ அது எனக்குள்ளே
வானம் கண்டு மிரள்கிறார்
யாரோ அது எனக்குள்ளே
அன்பில் கொஞ்சம் உருகினார்
யாரோ அது எனக்குள்ளே
துரோகம் கொண்டு உடைகிறார்
யாரோ அது எனக்குள்ளே
தேடல் கொண்டு பறக்கிறார்
யாரோ அது எனக்குள்ளே
இரவில் விடியலை விதைக்கிறார்
யாரோ அது எனக்குள்ளே
துயரத்தில் அழுகிறார்
முகமில்லா ஒருவர் எனக்குள்ளே
என் விழியன் வழியே வழிகிறார்

வெற்றி

2010, ஜூலை மாதம் 24ம் தேதி எழுதியது

வெற்றிகளை பாடும் வரிகளில்
பாதைகள் தொலைந்து போகும்
பாதைகள் தொலைந்த பூமியில்
அதிர்ஷ்டங்கள் பாவமாகும்

நான் ஒரு இடைவேளை

2010, ஜூலை மாதம் 6ம் தேதி எழுதியது

ஒளியின் நடுவில்
கொஞ்சம் நிழலாய் நான்
ஒளிவேன்

மேகத்தின் உள்ளே
கொஞ்சம் காற்றாய் நான்
மிதப்பேன்

கனுவுகளில் கலந்த
சிறு இருளாய் நான்
காத்திருப்பேன்

இசையில் கலந்த
ஒரு மௌனம் நான்
சுவாசிப்பேன்

நில்லாத நேரங்களை
நான் நின்று ரசிக்கிறேன்
ஓடிப்போகும் காலங்களில்
நான் ஒரு இடைவேளை

ஆறுதல்

2010, ஜூலை மாதம் 6ம் தேதி எழுதியது

கண் கெட்ட பின்
சூரிய நமஸ்காரம் என்று
பழி சொல்லும் உலகில்
யாரும் சொல்வதில்லை
விடியலுக்கு காத்திருந்த நேரம்
கண்களை பறித்து சென்றது யாரோ

கொடுமைக்காரர்

2010, ஜூலை மாதம் 6ம் தேதி எழுதியது

செய்வதறியா கண்களுக்கு
சில நேரங்களில்
கொடுமைக்காரராக தெரிகிறார்
கண்ணீர் கூடாது
என்று சொல்பவரும்