Archive for மே, 2010

ஏமாற்றம்

2010, மே மாதம் 30ம் தேதி எழுதியது

கனவுகளை நீரூற்றி
வளர்த்ததே குற்றமா
விதைகளின் முகவரியை
தொலைத்து நின்றேன் விழியருகே

Advertisements

வாழ்க்கை பாதை

2010, மே மாதம் 27ம் தேதி எழுதியது

வழிகள் மாறாமல் என்னை
அழைத்து செல்லும் இறைவன்
வலிகள் ஆறாமல்
கை பிடித்து செல்லும்
பிள்ளை நான்

அன்பு

2010, மே மாதம் 27ம் தேதி எழுதியது

வாரி வாரி கொடுத்தாலும்
வானின் மீது
மழைத்துளி
விழுவதுண்டோ

அர்த்தம்

2010, மே மாதம் 25ம் தேதி எழுதியது

வாழ்க்கை புரிய
வாக்கியங்கள்
எழுதி கொடுத்தான் இறைவன்
அகராதியை தராமல்

விடியல்

2010, மே மாதம் 22ம் தேதி எழுதியது

இருளில் ஒரு மழைத்துளி பட்டால்
அது நன்றாயினும் பிழையல்லவா
கைகள் எரிக்கும் தீப்பொறியை
காத்து நின்றேன் விடியலுக்காக

பிறப்பு

2010, மே மாதம் 20ம் தேதி எழுதியது

யாரும் அறிந்தார் அந்நாளே
நான் மண்ணில் பிறந்த பின்னே
அறியவில்லை யாரும் அந்நாளே
நான் என்னில் பிறந்த பின்னே

சிரிக்கும் கைதி

2010, மே மாதம் 16ம் தேதி எழுதியது

மனிதம் முழுதும்
போற்றினால் என்ன
உலகம் எல்லாம்
நேசித்தால் என்ன
வாழ்வுக்கு தூணாய்
நின்றாலும் என்ன
பிரபஞ்சம் காக்கும் இறைவனை
சிறைக்குள் பூட்டிச் சென்றார் பூசாரி

உயிரில் வெளிச்சம் – XI

2010, மே மாதம் 14ம் தேதி எழுதியது

கடலென்று தெரிந்த பின்னும்
கல்லை கண்டு நடுங்குவதுண்டோ
புயலாய் பிறந்த பின்னும்
முள்ளை கண்டு பதறுவதுண்டோ

கானல் நிலம்

2010, மே மாதம் 9ம் தேதி எழுதியது

விரிந்த நிலம் பொய்யென்று
அறிந்த விழி புரிந்ததென்று
கால்கள் போனது பின்னே
நெஞ்சம் மட்டும் போகுது முன்னே

பொய்

2010, மே மாதம் 1ம் தேதி எழுதியது
ஒருவன் பொய் என்றால்
கேட்பவன் மூடன்
நூற்றவர் பொய் என்றால்
சொல்பவன் மூடன்