Archive for பிப்ரவரி, 2010

மாற்றம்

2010, பிப்ரவரி மாதம் 27ம் தேதி எழுதியது
மாற்றம் ஒன்றே யாவரும் 
காணும் மாறாத நீதி
ஏற்றவர் காண்பார் வரம்
மற்றவர் காண்பார் விதி

இழையில் இதயம்

2010, பிப்ரவரி மாதம் 25ம் தேதி எழுதியது
நான் கொடுத்த காற்றும்
என்னை கடந்தே போகும்
மறந்து ஓடும் காற்று
உயிரை ஆட்டி செல்வதேன்

காற்றின் பிள்ளை

2010, பிப்ரவரி மாதம் 19ம் தேதி எழுதியது
பூக்களை நீ
தீண்டினாய் அம்மா
நானும் தீண்டினேன்
என்னை மட்டும்
முட்கள் தீண்டுவதேன்
 
தென்றலாய் நீ
மாறி போனாய் அம்மா
நானும் மாற நினைத்தேன்
என்னை மட்டும்
கற்கள் அடிப்பதேன்
 
பூமி எல்லாம் நீ
பரவி இருக்கிறாய் அம்மா
நானும் பரவ நினைத்தேன்
என்னை மட்டும்
சுவர்கள் தடுப்பதேன்
 
பிறக்கவில்லையே அம்மா
காற்றாய் நானும்
உன் தத்துப்பிள்ளையா நான்
உன்னில் என்னை உணர்ந்து பார்க்கிறேன்
ஒரு நாள் என்னை
பெற்றெடுப்பாய் என்றே
என்னக்குள் நானே பறந்து பார்க்கிறேன்

உயிரில் வெளிச்சம் – VII

2010, பிப்ரவரி மாதம் 7ம் தேதி எழுதியது
வானம் என்னுள்
விரிந்தது விண்ணே
உன் வெண்ணிலவு எனக்கு
தேவை இல்லை
என் நிலவை நீ
பறித்து சென்றால்
உன்னையும் கடப்பேன்
அந்நிலவை தேடி

பாடம்

2010, பிப்ரவரி மாதம் 4ம் தேதி எழுதியது
 
நிலவில் 
உயிர் இல்லையாம்
வானை
தழுவ முடியாதாம்
மாயாஜாலம்
மெய் இல்லையாம்
கனவில்
பொருள் இல்லையாம்
கற்றுத்தருகிறார்
பாவம்
ஆசிரியரின் குழந்தை