Archive for ஜனவரி, 2010

உள்நோக்கம்

2010, ஜனவரி மாதம் 31ம் தேதி எழுதியது
மழை பொழிந்தது
பூம்மிக்கு வர
என்ன ஆசையோ
 
தென்றல் வீசியது
காற்றுக்கு என்ன
அவசர வேலையோ
 
சூரியன் எழுந்தது
எதை பெற
உயிர் தந்ததோ
 
சுயநலம் பழகிய 
உலகமிது
தர்மம் இங்கு
பாவமானது
 
இறைவன் நாளை
ரூபம் கொண்டாலும்
அவரிடமும் கேள்வி எழுப்பும்
எந்த உள்நோக்கம் கொண்டு
இங்கு தோன்றினீர்கள் என்றே

பிச்சை

2010, ஜனவரி மாதம் 31ம் தேதி எழுதியது
போட்டியாளர் வெல்ல
ஒரு குறுஞ்செய்தி
பிச்சை கேட்கிறார்கள்
மூன்று ரூபாய் தானே
பிடித்ததென்றால்
அனுப்பிவிடலாம்…
தெருக்களை விட்டு
தொலைகாட்சியில் தோன்றி
கையேந்த முடியாதது
பிச்சைகாரர்களின் தவறு
அதற்கு நாம் என்ன செய்வது

வாழ்க்கை பாதை

2010, ஜனவரி மாதம் 28ம் தேதி எழுதியது

கனவில் தானே
இரவின்றி விடியும்
கடந்தால் தானே
தூரங்கள் முடியும்

ரசனை

2010, ஜனவரி மாதம் 28ம் தேதி எழுதியது

பூக்களின் வாசத்தை
நின்று அறிய துடிக்கும்
மனங்கள் ஆயிரம்
உதிர்ந்து போன
பூக்களின் கீதங்களை
கேட்கத்தான்
யாருக்கும் நேரமில்லை

தேடல் – X

2010, ஜனவரி மாதம் 28ம் தேதி எழுதியது

நிலவும் ஒரு நாள்
தேய்ந்து போகும்
உறக்கம் தேடி
கண்கள் காத்திருக்கும்
தேயாத கனவுடன்
நிலவை தேடி

அன்பு

2010, ஜனவரி மாதம் 28ம் தேதி எழுதியது

துரத்தி துரத்தி தடுத்தது
மேகக்கூட்டம்
அந்த கார்மேகத்தையும்
ஒளிர வைத்து சென்றது
நிலவல்லவா

நிலாப்படம்

2010, ஜனவரி மாதம் 28ம் தேதி எழுதியது

புகைப்படம் என்னை
ஏமாற்றி விட்டதா
நேற்று
கண்கள் பார்த்த நிலவை
கண்ணாடி பார்க்கவில்லையே

பிள்ளை நிலா

2010, ஜனவரி மாதம் 28ம் தேதி எழுதியது

காலையில்
சூரியத்தாய்
திரும்பும் வரை
மேகங்களுடன்
ஓடி விளையாடும்
பிள்ளை நிலா

பாவம்

2010, ஜனவரி மாதம் 24ம் தேதி எழுதியது

என்னுள் பிறந்தது
அந்த கனவின் பாவமன்றோ
பாவியை அழித்து
விதியை வென்றெடுப்பேன்

அதிர்ஷ்ட்டம்

2010, ஜனவரி மாதம் 23ம் தேதி எழுதியது

அதிர்ஷ்ட்டம் என்று
நாமாகவே
நினைத்து கொண்டதோ
நினைவில் கொண்டே
விரட்டி விடுகிறோம்
அதிர்ஷ்ட்டம் என்று
கடவுள் நமக்காய்
அனுப்பி வைத்ததோ
நினைவில் கொள்ளாமலே
விரட்டி விடுகிறோம்