Archive for நவம்பர், 2009

உண்மை

2009, நவம்பர் மாதம் 30ம் தேதி எழுதியது

மெய் என்று
எதை தான் நாடுவாய்
உன் கனவுகளில்
உன் நிஜங்களும்
பொய் தானே

Advertisements

துறவி – I

2009, நவம்பர் மாதம் 30ம் தேதி எழுதியது

வானம் விலகும்
இருளும் பரவி
ஞானம் பிறக்கும்
நான் கனவுத்துறவி

புயல்

2009, நவம்பர் மாதம் 20ம் தேதி எழுதியது

மழையில் வந்த புயலை
என்னுள் புதைத்தேன்
சாரல் முடிந்த தென்றலாய்
நான் மாறிப்போனேன்

உயிரின் சுவாசம் இறைவன்

2009, நவம்பர் மாதம் 17ம் தேதி எழுதியது

புன்னகை சிந்தையிலே
இறைவனை வெளியேற்றுகிறேன்
கண்ணீர் பிரிகையிலே
இறைவனை உள்வாங்குகிறேன்
வெளியேற்றியது பரவும்
அழகாய் மண்ணில்
உள்கொண்டதோ எரியும்
சுடராய் என்னில்

சுயநலம் – II

2009, நவம்பர் மாதம் 16ம் தேதி எழுதியது

இடி வந்தால்
காதை மூடுகிறான்
மின்னல் வந்தால்
கண்ணை மூடுகிறான்
மழை மட்டும்
வந்தால் மகிழ்கிறான்
சுயநலம் பார்த்தே
பழகிய மனிதனின்
முகம் கூட பார்க்காமல்
பொழிகிறது வானம்

போராட்டம்

2009, நவம்பர் மாதம் 15ம் தேதி எழுதியது

போர்க்கலங்கள் பூத்தது
உனக்காகத்தான்
விலகி நிர்ப்பதால்
போர்கள் நின்று விடுமா
போராடாத மனமும்
வாழ்வில் வென்று விடுமா

ஈரம்

2009, நவம்பர் மாதம் 13ம் தேதி எழுதியது

இந்த மண்ணில் ஈரம்
காய்ந்தது கண்ணா
மழை வரவே
காத்திருக்காயோ

உன் கண்ணில் ஈரம்
காய்ந்தது கண்ணா
தாய் வரவே
காத்திருக்காயோ

உன் பிஞ்சில் ஈரம்
காய்ந்தது கண்ணா
பசி வரவே
காத்திருக்காயோ

பலர் நெஞ்சில் ஈரம்
காய்ந்தது கண்ணா
யார் வர நீ
காத்திருக்காயோ

2009, நவம்பர் மாதம் 13ம் தேதி எழுதியது

கடவுள்
எல்லா இடங்கிளிலும்
இருக்க முடியாதென்று
அம்மாவை படைத்தார்
கடவுள்
எல்லோருக்கும் வாழ்க்கையை
கற்று தர முடியாதென்று
பிள்ளைகளை படைத்தார்

அக்கரைக்கு இக்கரை

2009, நவம்பர் மாதம் 8ம் தேதி எழுதியது

பறவைகளுக்கும்
கனவுகள் இருக்குமோ
மனிதனை போல்
நிம்மதியாய்
தரையில் வாழ

சப்தம்

2009, நவம்பர் மாதம் 8ம் தேதி எழுதியது

அம்மா உறங்கும் இரவில்
காற்றில் ஏதோ சப்தம்

அம்மா எந்தன் அருகில்
செவிக்கு புரியாத சப்தம்

பேயோ ஆவியோ இருக்காது
எனக்கு பயம் தராத சப்தம்

அம்மா உறங்குவதால் இருக்காது
அது குழப்பம் தந்த சப்தம்

எந்த பொருளும் தென்படவில்லை
மௌனத்தால் கொன்ற சப்தம்

அம்மாவின் முகத்தை
கூர்ந்து பார்த்தேன்
புரிந்தது
சப்தத்தின் மூலம்
நான் தான் என்று

அம்மாவின் உள்ளே
நான் உறங்கிய போது
நான் போட்ட சப்தம்
அது
என் ஆன்மாவின் சப்தம்