Archive for ஒக்ரோபர், 2009

விழிப்பு

2009, ஒக்ரோபர் மாதம் 31ம் தேதி எழுதியது

இருளே உன்னை சூழ்ந்தாலும்
விழித்தே எழுந்திடு எந்நாளும்
மேகம் கொஞ்சம் மறைத்ததால்
நிலவுக்கு வானம் சிறையாகுமா

Advertisements

கடலுக்குள் இதயம்

2009, ஒக்ரோபர் மாதம் 30ம் தேதி எழுதியது

கடலில் கால் வைத்து
நடந்து சென்றதாய்
மனம் சிலிர்த்தேன்
அலைகள் ஏனோ
பாதங்களை விலக
உணர்ந்தேன்
நான் நடந்தது
கடலில் இல்லை
கடற்கரையில்

நீங்கிய அலைகள் யாவும்
என்னை விட்டு செல்ல
என் மனதை மட்டும் ஏன்
அடித்து சென்றதோ

அலைகளின் ஓசை ஓங்கி நிற்க
கேட்குமா கடலின் செவிகளுக்கு
திசையை தொலைத்த என்
மௌனங்கள் யாசிப்பது

யாருக்காக விழித்தது இயற்க்கை

2009, ஒக்ரோபர் மாதம் 30ம் தேதி எழுதியது

குரல் உயர்த்தி
பேசுபவன் எல்லாம்
தைரியசாலி
மண்ணை உடைத்து
வளரும் புல்லை
பாராட்டத்தான்
பார்வையில்லை இங்கே

நண்பனுக்கு கொஞ்சம்
விட்டுக்கொடுப்பவன் கூட
தியாகி
இரவின் கண்ணீரை
ஏந்தும் பூக்களை பார்த்து
நெகிழத்தான்
நெஞ்சமில்லை இங்கே

ஐந்து நிமிடம்
காத்திருப்பவனும்
பொறுமைசாலி
உயிர்கள் வாழ நூற்றாண்டுகள்
சுவாசிக்கும் மரங்களை
வியக்கத்தான்
நேரமில்லை இங்கே

ஒரு ருபாய்
பிச்சை போடுபவனும்
சேவகன்
களங்கம் செய்த பூமியின் மேல்
பொழிந்து விழும் வானை
போற்றத்தான்
கவியில்லை இங்கே

நிறங்களை வைத்து
விளையாடுபவன்
ஓவியன்
கடவுள் வரைந்து வைத்த
ஓவியங்களை
காணத்தான்
கண்ணில்லை இங்கே

இரு வரிகள்
உலருபவனும்
கவிஞன்
வாழ்க்கை பாடங்கள் ஆயிரம்
பாடும் இயற்கையை
ரசிக்கத்தான்
யாருமில்லை இங்கே

கடவுள் பார்வை

2009, ஒக்ரோபர் மாதம் 28ம் தேதி எழுதியது

யாருக்கும் உதவாமல்
தனக்கென்று
வரம் கேட்பவன்
பிச்சைக்காரன்
தன் செயலுக்கு
பலன் வர நம்பி
நன்மை புரிபவன்
வேலைக்காரன்
ஆயிரம் அடிகள்
விழுந்தாலும் உலகை
கரம் நீட்டி அணைப்பவன்
கடவுளின் பிள்ளையாகிறான்

2009, ஒக்ரோபர் மாதம் 28ம் தேதி எழுதியது

குரலுடன்
இசை சேர்ந்ததால்
பாடல் அழகானது
அந்த பாடலுடன்
நீ சேர்ந்ததால்
என் நினைவுகள் அழகானது

அழகான அவமானம்

2009, ஒக்ரோபர் மாதம் 25ம் தேதி எழுதியது

கோடி மக்கள்
அறிந்தவரோ
கண்டவர் எல்லாம்
மலைத்தவரோ
புகழுக்கே புகழை
தந்தவரோ
ஒரு நொடியில்
தோற்றுப்போனார்
தாயின் ஸ்பரிசம்
இல்லையென்று
அறிந்து அழுத
குழந்தையிடம்

முதலீடு

2009, ஒக்ரோபர் மாதம் 24ம் தேதி எழுதியது

அன்பு தான்
சிறந்த முதலீடென்று
சொன்னார்கள்
நம்பவில்லை நானும்
நஷ்டத்தை தவிர
வேறேதும்
கண்டதில்லையே நெஞ்சம்

ஆசை

2009, ஒக்ரோபர் மாதம் 23ம் தேதி எழுதியது

கூடு கட்ட
எண்ணம் இல்லாதவன்
பறவையாய் வாழ
ஆசைப்படுகிறான்

உண்மைகள்

2009, ஒக்ரோபர் மாதம் 22ம் தேதி எழுதியது

உண்மைகள் கண்ணில் வேண்டாம்
என் விழியன் துளி விழுகுது மண்ணில்
உண்மைகள் செவியில் வேண்டாம்
என் நெஞ்சில் ஏதோ கரையுது தன்னில்
உண்மைகள் உயிரில் வேண்டாம்
என் நிலை மறந்தேன் அந்த மௌனப்பிடியில்
உண்மைகள் இன்றே வேண்டாம்
ஒரு நாள் உறங்குவேன் அந்த கனவின் மடியில்

ஆலோசனை

2009, ஒக்ரோபர் மாதம் 17ம் தேதி எழுதியது

எப்பொழுதும்
சிரித்த முகத்துடன்
இருக்க சொல்பவன் ஞானி
அதை செய்து காட்டுபவன்
பைத்தியக்காரன்