Archive for ஜூலை, 2009

கிளியே

2009, ஜூலை மாதம் 17ம் தேதி எழுதியது

மண்ணில் துள்ளி விளையாடி
நகர்ந்து போ கிளியே
விண்ணில் புள்ளி அழகாக
பறந்து போ கிளியே
மரக்கிளையும் தொட்டில் தான்
உறங்கி வா கிளியே
இயற்க்கை உனக்கென விரிந்தது
உணர்ந்து வா கிளியே
மறவாமல் மாலை கூண்டில்
வந்து விடு கிளியே
மனிதன் எழுதி வைத்தான்
உனக்காய் ஓர் விதியே

Advertisements

யதார்த்தம்

2009, ஜூலை மாதம் 16ம் தேதி எழுதியது

கரங்கள் உனக்காய்
யதார்த்தம் கண்டிருந்தால்
இதழ்கள் எட்டவே
நீளங்கள் நின்றிருக்கும்

விழிகள் உனக்காய்
யதார்த்தம் கண்டிருந்தால்
உன் முகம் காணவே
பார்வைகள் பூத்திருக்கும்

செவிகள் உனக்காய்
யதார்த்தம் கண்டிருந்தால்
உன் ஒலி மட்டும்
விரிந்தே ஓய்ந்திருக்கும்

உயிரும் உனக்காய்
யதார்த்தம் கண்டிருந்தால்
உயிரின் உயிரே
காணாமல் போயிருக்கும்

யார் நிலைக்கும் அழுவதில்லை
யதார்த்தம் பேசும் மனிதன்
இவையே கேட்கும் அவன் நிலைக்கு
கடவுள் மட்டும் அழுகிறது

கனவு – X

2009, ஜூலை மாதம் 16ம் தேதி எழுதியது

கனவே கனவே
கணவாய் பிறந்தாயே
கனவில் கூட
கணவாய் பிரியாதே

தனிமை – IV

2009, ஜூலை மாதம் 12ம் தேதி எழுதியது

என்னை நானாய் உணரவே அஞ்சி
நான் தவிர்த்த தனிமையிடம்
இன்று நட்பு கொண்டேன்
என்னை நீயாய் உணர்ந்த பின்

விதி

2009, ஜூலை மாதம் 6ம் தேதி எழுதியது

உன் நிறம் நீ
உன்னில் புதைத்தால்
விதி என்ன செய்யும்
பூ மனமே

வெற்றி

2009, ஜூலை மாதம் 5ம் தேதி எழுதியது

வெற்றி கொள்ள வாழாமல்
கற்று கொள்ள வாழ்வோம்
வெற்றியின் பாதையில்
கற்றது மறையலாம்
கற்றவர் பாதையில்
வெற்றிதான் மறையுமா

குப்பை மனிதர்கள்

2009, ஜூலை மாதம் 1ம் தேதி எழுதியது

தோற்றமே எங்கள் பாவமானதா
சாலையோரம் கிடக்கும் கற்களையே
உங்கள் பார்வையில் கோர்த்து வீசுகிறீர்கள்

நகர்வதே எம்முடல் பிழையானதா
நோய் சேர்க்கும் கிருமிகளையே
எங்கள் பிம்பங்களாய் மாற்றுகிறீர்கள்

வாழ்வதே வாழ்வின் குறையானதா
எங்கள் நிலையின் அடையாளங்களை
உங்கள் சாபங்களில் சேர்க்கிறீர்கள்

பிறந்ததே எங்கள் தவறானதா
தெருவோர மிருகம் காணும் கருணை
எங்கள் கேள்விக்கு தர மறக்கிறீர்கள்

இந்த வரிகளும் கடந்து செல்லும்
உங்கள் நெஞ்சில் விழுந்த குப்பையாகவே
நாங்களும் நாளை கடந்து செல்வோம்
உங்கள் கண்களில் விழுந்த குப்பையாகவே