Archive for ஜூன், 2009

நட்பு – III

2009, ஜூன் மாதம் 28ம் தேதி எழுதியது

இன்று ஏந்திய கரங்கள்
நாளை வேறாகக்கூடும்
எந்த மின்மினி பறந்தாலும்
இரவில் ஒளியே பரவும்

Advertisements

ஏமாற்றம் – VII

2009, ஜூன் மாதம் 28ம் தேதி எழுதியது

கண்களில் இரண்டு
கவிதைகள் செய்தேன்
கனவில் ஒன்று
மறைந்து போக
நிஜத்தில் ஒன்று
தொலைந்து போக
வரிகள் மட்டும் நிலைத்து
உயிரில் கலந்து கொன்றதால்
விழிகள் மட்டும் திரும்பவே
யாசித்து நின்றேன் இறைவனே

தேடல் – IX

2009, ஜூன் மாதம் 28ம் தேதி எழுதியது

தேடி சென்றது
தோன்றாமலே
எனை மறந்து போனதால்
மனம் சரிந்தேன்
தேடி வந்தது
காணாமலே
எனை விலகி போனதால்
உயிர் உடைந்தேன்

விழிகள் அறியாத புன்னகை

2009, ஜூன் மாதம் 27ம் தேதி எழுதியது

பார்ப்பவர் அறியவே
சிரித்து பழகியதில்லை என்று
இருள் படியும் உன்
கண்களின் முன்னே
மலர்ந்த புன்னகையால்
அறிந்து கொண்டேன் இன்று

தூரங்கள்

2009, ஜூன் மாதம் 25ம் தேதி எழுதியது

நீரின் கண்ணீர்
வெண்ணிலா அறிவதில்லை
நிலவின் கிழிஞ்சல்
நீரில் விழுவதில்லை

உயிர்க்கல்

2009, ஜூன் மாதம் 25ம் தேதி எழுதியது

எந்த அடியில்
சிலை பிறந்தது
எந்த அடியில்
சிலை உடைந்தது
என் கண்மணி
தீர்த்து வைக்கும்
கல்லின் ஈரத்தை
யார் வந்து
தீர்த்து வைப்பார்
கல்லின் சோகத்தை

ஏமாற்றம் – VI

2009, ஜூன் மாதம் 21ம் தேதி எழுதியது

உதிரப்போகும் பூக்களை
கையில் பிடித்ததாலே
செயற்க்கை பூக்களை
பிடித்து நிற்கும் உலகம்
என்னை ஏமாளி என்கிறது

நீ வந்தால்

2009, ஜூன் மாதம் 21ம் தேதி எழுதியது

வண்ணமாக நீ வந்தால்
ஓவியமாய் மாற்ற
முடியாமல் போனாலும்
மலராய் என்
கண்ணில் வைப்பேன்

வார்த்தையாய் நீ வந்தால்
கவிதையாய் மாற்ற
முடியாமல் போனாலும்
சலிக்காமல் என்
புன்னகையில் வைப்பேன்

காற்றாய் நீ வந்தால்
தென்றலாய் மாற்ற
முடியாமல் போனாலும்
ஓயாமல் என்
சுவாசத்தில் வைப்பேன்

ஒலியாய் நீ வந்தால்
இசையாய் மாற்ற
முடியாமல் போனாலும்
தொலையாமல் என்
மௌனத்தில் வைப்பேன்

உணர்வாய் நீ வந்தால்
மகிழ்ச்சியாய் மாற்ற
முடியாமல் போனாலும்
தீராமல் என்
அன்பில் வைப்பேன்

கணவாய் நீ வந்தால்
காட்சியாய் மாற்ற
முடியாமல் போனாலும்
அழியாமல் என்
உயிரில் வைப்பேன்

வியாபாரம் – II

2009, ஜூன் மாதம் 21ம் தேதி எழுதியது

மருத்துவமனையில் இருந்த
சாமி சிலையும்
ஊமையாய் பார்த்தது
உயிர் காக்கும் சேவகனும்
இன்று வியாபாரம் செய்கிறான்

ஏமாற்றம் – V

2009, ஜூன் மாதம் 21ம் தேதி எழுதியது

அன்று
கண்ணீர் விட்டால்
பொம்மை கிடைக்கும் என
தாயை ஏமாற்றினேன்
இன்று
கண்ணீர் விடாமல் இருந்தால்
துக்கம் மறையும் என
என்னை ஏமாற்றினேன்