Archive for ஏப்ரல், 2009

ரீமாவுக்கு பிறந்தநாள்

2009, ஏப்ரல் மாதம் 30ம் தேதி எழுதியது

பிறந்தநாள் வாழ்த்து சொன்னால்
உனக்கு புரியாது என்பதாலே
உன்னை ஒரு வருடம்
சுமந்த பூமிக்கு
இனிய வாழ்த்துக்கள்

Advertisements

நண்பன்

2009, ஏப்ரல் மாதம் 29ம் தேதி எழுதியது

காலை மாலை
காக்க வைத்தான்
ஓடி ஓடி
கலைக்க வைத்தான்
கண்டும் காணாமல்
அலட்சியம செய்தான்
பயணிகளின் நண்பன்

கனவு – V

2009, ஏப்ரல் மாதம் 27ம் தேதி எழுதியது

எதிர்காலத்தின்
கனவை துறந்தேன்
நிகழ்காலமே
கணவாய் போனதால்

பங்கு சந்தை

2009, ஏப்ரல் மாதம் 24ம் தேதி எழுதியது

ஏற்றம் இறக்கம் கண்டு
வாழ்க்கை கற்க்கவே
என்னையும் இறக்கி வைத்தாய்
உன் பங்கு சந்தையில்

சாபம்

2009, ஏப்ரல் மாதம் 19ம் தேதி எழுதியது

மழை இரவுகள்
பாடிய தாளங்களை
முழுங்கி கொண்ட
வாகனங்கள் ஏற்றது

ஜன்னல் நிலவை
கவிதைகள் மட்டும் பாட
பார்வையை மறைத்த
சுவர்கள் ஏற்றது

அந்த ஊமை மண்ணும்
பேசும் மொழிகள்
கண்மூடியும் கேட்காமல் போக
இந்த பூமி ஏற்றது

ஆற்றங்கரை நீரை
கானல் பிழையாக செய்த
தண்ணீர் குவளைகளுக்கு
நகரமே ஏற்றது

ஏதேதோ வடிவங்களில்
இன்னும் ஏற்க வரும்
எங்கள் இயற்க்கை சாபங்களை
பல செயற்க்கை சாபங்கள்

ஏற்ற பிழைப்பை
குறை சொல்லித்தான்
வார்த்தையில்லாமல்
இம்முறையும்
ஊருக்கு கிளம்பியது
நாளை அம்மாவிடம்
சேரப்போகும் கடிதம்

பாதை – II

2009, ஏப்ரல் மாதம் 19ம் தேதி எழுதியது

வந்தோம் எனவே
செல்ல வேண்டாம்
செல்வோம் எனவே
வரவு வேண்டும்

2009, ஏப்ரல் மாதம் 19ம் தேதி எழுதியது

இன்றும் நினைவு கொண்டோம்
உங்களிடத்தில்
அச்சம் மட்டும் நினைவாய் நின்றது
எங்களிடத்தில்

தெய்வம் உங்களுக்கு பின்னென்றே
சொல்லை படித்தோம்
ஆதலால் தெய்வம் வேடிக்கை பார்த்ததா
உங்கள் சொல் செய்த காயங்களை

கல்வி செல்வம் என்று
தந்தை சொல்லிய நினைவுண்டு
செல்வம் ஏதும் கேட்கவில்லை
எங்கள் தேவை கண்டு நீரூற்றுங்கள் போதும்

கேள்விகள் கேட்பதை கூட
பிழை என்று சொல்லியும்
விடை புரியாததால்
ஒரே ஒரு கேள்வி
உங்களிடம் –
வாழ்க்கையில்
எந்த பாடத்தை
கற்றுதர
எங்கள் உடலை வருத்தி
உயிரை உடைக்கிறீர்கள்?

2009, ஏப்ரல் மாதம் 18ம் தேதி எழுதியது

எங்கள் நிலவின்
ஒளியை பறித்தீர்
எங்கள் தென்றலின்
குளிரை பறித்தீர்
எங்கள் நதியின்
ஜதியை பறித்தீர்
பெற்றது தான்
நாங்கள் செய்த குற்றமா
கடவுள் தந்த முத்தை
வைரமாய் மாற்ற
உங்களிடம் கொடுத்தோம்
அதை கல்லாக மாற்றி
மண்ணில் ஏன் வீசினீர்கள்

2009, ஏப்ரல் மாதம் 16ம் தேதி எழுதியது

சிரித்து பேசும்
குரல்கள் உண்டு
மொழிகள் சேரும்
செவிகள் உண்டு
வலிகள் புரியும்
மனங்கள் மட்டும்
அரிதாய் போகும்
விடையாய் உண்டு

கானல் கனவுகள்

2009, ஏப்ரல் மாதம் 16ம் தேதி எழுதியது

பாலைவனத்தில்
கானலை கண்டே
என்னுடன் நானில்லை
விதைத்தேன் கனவு மட்டும்

கானல் தெளிய
அழிவின் பிடியில்
என்னுடன் கனவில்லை
விழித்தேன் நான் மட்டும்