Archive for மார்ச், 2009

தேடல் – VII

2009, மார்ச் மாதம் 29ம் தேதி எழுதியது

பூங்காற்று கடந்ததா
அறியவில்லை கண்களே
சுவாசத்தை காற்றில்
தூது விட்டு வந்தேன்
விடையை யாசித்து உயிரிலே

Advertisements

விளம்பரம்

2009, மார்ச் மாதம் 28ம் தேதி எழுதியது

பாசம் இல்லை
பொருட்க்கள் மட்டும்
உள்ளம் இல்லை
உடைகள் மட்டும்
நிஜங்கள் இல்லை
நிறங்கள் மட்டும்
தரங்கள் இல்லை
தோற்றம் மட்டும்
திரையில் சூழ்ந்த மாயை
வணிகம் கூவிய வெற்றி

பொறாமை

2009, மார்ச் மாதம் 28ம் தேதி எழுதியது

நாட்டின் அரசனும்
பொறாமை கொண்டு
நின்றான்
சதுரங்கத்தில்
உன் பிஞ்சு விரல்கள்
வீரனின் மேலே

பழி

2009, மார்ச் மாதம் 26ம் தேதி எழுதியது

நீராக இருந்ததாலே
நிலவின் பிம்பம்
ஏற்று நின்ற
ஏரியினை
பேராசை கொண்டு
வாழ்வதென
பழி சொல்லும் பூமி

முத்துச்சொற்க்கள்

2009, மார்ச் மாதம் 21ம் தேதி எழுதியது

சூழல் நன்றாய்
நித்தம் கண்டு
சொல்லில் பிறக்கும்
முத்துக்கள் ஆயிரம்
ஒரு கணம் சரிந்தால்
காலம் காட்டி கொடுக்கும்
சொல் தந்த முத்து
மண்ணில் புதைந்ததா
மனதில் தெளிந்ததா

வருத்தம்

2009, மார்ச் மாதம் 21ம் தேதி எழுதியது

தொலைந்து போன
குழந்தை பருவத்தை
நான் வருந்தியதில்லை
குழந்தையை பார்த்து
நீ சிரித்த வறை

நம்பிக்கை – III

2009, மார்ச் மாதம் 15ம் தேதி எழுதியது

இரு நிறுத்தங்கள்
இடையே ஒரு ஆரம்பம்
அவநம்பிக்கை
இரு ஆரம்பங்கள்
இடையே ஒரு நிறுத்தம்
நம்பிக்கை

புத்தகம் – II

2009, மார்ச் மாதம் 15ம் தேதி எழுதியது

பொழுதில் சிந்தித்து
கருத்தை அமைத்து
வார்த்தை படைத்து
எழுதியதோர் சித்திரம்
எங்கோ இருந்த
இல்லம் அதில்
மின்வெட்டு விசிறி

உவமை

2009, மார்ச் மாதம் 12ம் தேதி எழுதியது

காகிதங்கள் வானிலே
கனவுக்கூட்டம் காற்றிலே
கவிதை நூலா நிலவிலே
துயர் ஆற்றும் தாயா கடலிலே
மழலை நெஞ்சம் விழியிலே
ஏழை வீடோ மனதிலே
இக்காலம் மறந்து பறந்ததென்ன
இந்த உவமை கூண்டில் அடைந்ததாலே

இன்றும் நலம்

2009, மார்ச் மாதம் 9ம் தேதி எழுதியது

விடியல் வந்தது
விழி வைத்தும்
சிரிப்பு காற்றில்
செவி வைத்தும்
தேவை கண்டே
குரல் வைத்தும்
குணம் உணர்ந்தே
மனம் வைத்தும்
இன்றும் என்னில்
என்றும் நலம்
விழியொன்றை
செவியொன்றை
குரலொன்றை
மனமொன்றை
காணாமல்
வைக்கத்தான்
காத்திருந்த
கனவுகள் கோடி