Archive for பிப்ரவரி, 2009

முழுமை

2009, பிப்ரவரி மாதம் 27ம் தேதி எழுதியது

வாகனத்தின்
கண்ணாடி திரையின் பின்
என்னை பார்த்து
சிரித்தது குழந்தை
நிறம் மறைத்த முகம்
மனதில் முழுமை கண்டதால்
மனதை முழுமை செய்ததா

யார்?

2009, பிப்ரவரி மாதம் 27ம் தேதி எழுதியது

யார் கொடுத்த
பேட்டி என்று
கடந்த பக்கங்கள் ஐந்து

இரு பக்கம்
சிரித்து நின்ற
அந்த நடிகையா?

அரை பக்கம்
முறைத்து நின்ற
அந்த நடிகனா?

கடைசி பக்கம்
கண்ணை பறிக்காத மூலையில்
கண்கள் அறியாத உணர்வுகளுடன்
நின்ற பதில் – படைப்பாளி

குழப்பம்

2009, பிப்ரவரி மாதம் 25ம் தேதி எழுதியது

ஒரு முறை
கண்ணை
கடந்ததால்
பிரிந்தது
மறு முறை
காட்சி
கரைந்ததோ
உயிரிலே

நிறங்கள்

2009, பிப்ரவரி மாதம் 21ம் தேதி எழுதியது

மனம் லேசாக
உடன்வந்த நீலம்
என்னுயிர் தோழி

புரியாத தென்றல்
ஏனோ பிடித்த ஊதா
கேலி செய்யும் தங்கை

கோபம் கலந்த அன்பால்
குழப்பி சென்ற பழுப்பு
சண்டை போடும் அண்ணன்

சற்று பயந்தும்
மறுக்க முடியா சிவப்பு
கரம் கொடுக்கும் தந்தை

வாழ்ந்த போதும் வீழ்ந்த போதும்
ஓயாத சூரிய மஞ்சள்
வரம் கொடுக்கும் தாய்

நிறங்கள் எல்லாம்
வெளிகொடுத்த வெள்ளை
நான் உணர்ந்த பாசம்

உண்மை

2009, பிப்ரவரி மாதம் 19ம் தேதி எழுதியது

காட்சி ஒன்று
விரிந்ததோ விழிகளிலே
சப்தம் ஒன்று
சிதறியதோ செவிகளிலே
ஸ்பரிசம் ஒன்று
உணர்ந்ததோ உணர்வுகளே
மனம் போதித்ததால்
இதுவே உள்ளதேனச் சொல்லி
மெய்தான்
என எண்ணியதோ
மெய்தானா
நான் அறியேன்

ஏமாற்றம்

2009, பிப்ரவரி மாதம் 15ம் தேதி எழுதியது

கரையில் ஒரு நாள்
பூக்கள் பூக்க
அழைத்து வந்தேன்
கனவை மட்டும்
பூக்கள் ஒரு நாள்
உதிரக்கண்டேன்
அழைத்து சென்றேன்
நிழலை மட்டும்

கனவு – III

2009, பிப்ரவரி மாதம் 15ம் தேதி எழுதியது

தென்றல் வருடவே
மண்வாசம் பரவவே
பூக்கள் விழிக்கவே
கணுக்கள் சிலிர்க்கவே
சிறுகுயில் குரலிலே
என் இளவெயில் கனவிலே

தனிமை – II

2009, பிப்ரவரி மாதம் 14ம் தேதி எழுதியது

கடிகாரம் காண மறுத்த
தனிமை கதைகளை
நாள்காட்டி கண்டு கழித்ததா

அன்பு – I

2009, பிப்ரவரி மாதம் 8ம் தேதி எழுதியது

விதிமுறைகள்
தோன்றும் முன்
தோன்றிய அன்பு
தோன்றும் முன்
விதிமுறைகள்

இதயம்

2009, பிப்ரவரி மாதம் 8ம் தேதி எழுதியது

நேசம் பாசம்
ஆசை அச்சம்
மயக்கம் நடுக்கம்
குழப்பம் கலக்கம்
மனிதனை புரிந்து
துடித்தது இதயம்
துடித்ததில் தான்
விடை இருந்தும்
இதயத்தை புரிய
மனிதனில் தயக்கம்