Archive for ஜனவரி, 2009

சரிவு

2009, ஜனவரி மாதம் 25ம் தேதி எழுதியது

வானகமே எனை தாண்டி
சரியாதே விண்ணோடு
இருளில் ஓர் ஒலி கண்டேன்
அந்த நிலவும் சரியும் உன்னோடு

பூரணம்

2009, ஜனவரி மாதம் 25ம் தேதி எழுதியது

இல்லாமல் போனதும்
முழுமை தருமோ
சொல்லின் பூரணம்
மௌனத்தில் வருமோ

வெளிச்சம்

2009, ஜனவரி மாதம் 16ம் தேதி எழுதியது

பிச்சைக்காரன்
கண்களில்
வெளிச்சம்
தலைவர் வருகை

நாளை

2009, ஜனவரி மாதம் 14ம் தேதி எழுதியது

நட்சத்திரங்களை
எண்ணினால்
விடிந்து விடும்
நாளை எண்ணுவோம் என
நாளைகள் பலநூறு
நேற்றானபின்னும்
இன்றும் நட்சத்திரம்
மறையவில்லை
நாளையும் நானும்
மாறவில்லை

அளவுகோல்

2009, ஜனவரி மாதம் 11ம் தேதி எழுதியது

அன்பின் அளவுகோல்
நாட்களாக இருந்திருந்தால்
மழலையின் சிரிப்பில் அழகிருக்காது
அன்பின் அளவுகோல்
வார்த்தைகளாய் இருந்திருந்தால்
மௌனத்தில் அர்த்தம் பிறந்திருக்காது
அன்பின் அளவுகோல்
செயலாக இருந்திருந்தால்
தூரங்கள் பாலமாய் விரிந்திருக்காது
அன்பின் அளவுகோல்
அன்பாக இல்லையெனில்
இதயங்கள் அன்பிற்க்கு துடித்திருக்காது

அராய்ச்சி

2009, ஜனவரி மாதம் 11ம் தேதி எழுதியது

கலை உண்டு மழை உண்டு
சிரிப்புண்டு சிந்தனை உண்டு
மரம் உண்டு கிளை உண்டு
வான் உண்டு வானவில் உண்டு
பூமியே விரிந்தோடுகிறது
ஆராய்ந்து பார்த்து
மனதின் அறியாமை தீர்க்க
மனமோ பறந்தோடுகிறது
மானிடரை ஆராய்ந்து
வாழ்வை புரியாமல் தீர்க்க

அம்மா

2009, ஜனவரி மாதம் 11ம் தேதி எழுதியது

என்னை
குழந்தையாக
நினைவில் கொண்டு
சிரித்ததில் கண்டேன்
குழந்தையாக
உன்னை

களங்கம்

2009, ஜனவரி மாதம் 10ம் தேதி எழுதியது

நட்பில் களங்கம்
கண்டதில்லை
நட்பால் களங்கம்
கண்டதுண்டு
மொழியை ஏமாற்றி
பேசி முடித்தது
உன் மனமும்
என் மனமும்

தேடல் – V

2009, ஜனவரி மாதம் 10ம் தேதி எழுதியது

வானை அளக்க
நேரமில்லை
வழியை ரசிக்க
தோன்றவில்லை
விழியின் மணிகள்
மறைந்த பின்னும்
கனவில் கூட
சிரித்ததில்லை
மனதின் சப்தம்
செவியை அடைக்கும்
சப்தம் நின்றால்
உயிரை அடைக்கும்
செவியின் தேடல்
நிம்மதி என்றால்
மனதை கேளாமல்
தேடியது எதனால்

பொருள்

2009, ஜனவரி மாதம் 10ம் தேதி எழுதியது

மலர் ஒன்று
கண்ணை பரித்ததிலே
மேகக்கூட்டம்
வானை மறைத்ததிலே
கனவொன்றை
நினைவூட்டும் காட்சியிலே
மழையும் மழலையும்
மனதை வருடி சென்றதிலே
வடிவத்தால் வரிகளால்
இசையொன்று உயிரில் கலந்ததிலே
மனத்தடையை
உடைத்து வழிந்த நீரினிலே
காரணம் புரியும் முன்
இதழ்கள் கண்ட விரிவினிலே
அச்சம் பொழிந்த சாரலில்
காக்கும் அன்பெனும் குடையிலே
பாராமல் வந்த நிகழ்வொன்று
பதித்து சென்ற குழப்பத்திலே
விடைகள் ஆயிரம் சூழ
வினா தேடி கரைந்ததிலே
நெஞ்சம் தேட மறுத்த பொருள்
நான் அறிய மறந்த பொருள்