Archive for திசெம்பர், 2008

புன்னகை

2008, திசெம்பர் மாதம் 28ம் தேதி எழுதியது

நீ அழும் பொழுது
காரணம் அறிய
பதறி போன மனதுக்கு
யோசிக்க கூட தோன்றவில்லை
உன் புன்னகையின் காரணத்தை

Advertisements

திருட்டு

2008, திசெம்பர் மாதம் 28ம் தேதி எழுதியது

கள்ளம் கபடம் அறியா உன்னிடம்
கள்வர்கள் ஆனோம்
நீயே அறியாமல்
பல நினைவுகளை திருடி சென்று

தேவைகள் – அன்று இன்று

2008, திசெம்பர் மாதம் 27ம் தேதி எழுதியது

விழா
மனம் கேட்ட பொம்மை
பிள்ளை கேட்ட நேரம்

பணம்
ஒரு நாள் இனிப்பு விரும்பி
சேர்த்தோம் காரணம் மறந்து

நட்பு
பிழையை கூட மறைத்தது நேசம்
மனதில் ஏனோ ஒரு வாக்குவாதம்

பார்வை
அழகு பிடித்தது குறையை ரசித்தது
காணாமல் துளைத்த இன்பங்கள் ஆயிரம்

புன்னகை
எதற்கென்றே அறியாத மனம்
தடை தந்தது புரியாத பயம்

அம்மா
விழித்ததும் விழிகள் தேடி
காணவே நேரம் தேடி

நேரம்
எதை செய்வதென குழம்பிய மனம்
மீண்டும் குழப்பம் எதை செய்யாமல் விலக

வாழ்க்கை
நொடிகளில் வாழ்ந்து நாட்களை மறந்தோம்
நாட்களில் வாழ்ந்து நொடிகளை மறந்தோம்

கிழிசல்

2008, திசெம்பர் மாதம் 25ம் தேதி எழுதியது

காற்றோ கரமோ
காரணம் என்றால்
மருந்தொன்றை தேடலாம்
வார்த்தைகள் சிதைத்தனவே
எதை தேடுமோ இந்த கிழிசல்

அம்மாவும் நானும்

2008, திசெம்பர் மாதம் 22ம் தேதி எழுதியது

மழைக்கு அஞ்சாமல்
வெயிலுக்கு விலகாமல்
கண்ணீரால் கரையாமல்
துன்பங்களால் ஓயாமல்
வாழ்க்கை பாதையில்
நடந்து கொண்டே இருக்கும் நீ
என் மன விசும்பலுக்கு
அச்சம் கொண்டு நின்றாய் அம்மா

ஒரு முறையாவது
என்னை சூழ்ந்த கால சக்கரம்
நின்று விட வேண்டும்
அந்த கண்ணீருக்கும்
நீ பதறுவாய் எனவே
நீயே அறியாமல்
உன் மன கனவுகளுக்கு
விடை தந்து அழுவேன் அம்மா

விடை

2008, திசெம்பர் மாதம் 21ம் தேதி எழுதியது

கடலின் ஓசை
உரைத்து செல்லும்
கேள்விகளுக்கு
கரையும் என
அறிந்தே எழுதிய
விடையாய் நான்

காலம் – I

2008, திசெம்பர் மாதம் 14ம் தேதி எழுதியது

கரையும் கனவுகளுக்கு
பதிலை தேடாமல்
மறையும் நிஜங்களை
மனதில் செதுக்குவோம்

எங்கள் வாழ்வின் நவரசம்

2008, திசெம்பர் மாதம் 7ம் தேதி எழுதியது

என் 100 வது கவிதை – எங்கள் வீட்டு கவிதை(ரீமா)க்கு இது சமர்ப்பணம்

ஆச்சர்யம்

உன் விரல் அசைவு முதல்
விழி அசைவு வரை
தினமும் புதிதாய் தோன்றுகிறாய்

பயம்

காற்றுக்கு கூட
காவல் வைப்போம்
உன்னை தீயவை
அண்டாமல் இருக்க

கருணை

பலன் ஏதும் இல்லாமல்
உன் மேல் அன்பு செலுத்தியதால்
அனைத்து உயிர்களுக்கும்
கருணை காட்டி பழகினோம்

கோபம்

உன் உறக்கத்தை களைத்த
ஒலிகள் மீதும்
இசையின் மீதும் கூட
எங்கள் கோபம்

சாந்தம்

இமைகள் மூடிய உன் முகம்
சாந்தமாக்கும்
ஆயிரம் புயல்களை

சோகம்

உன்னை சூழ்ந்த
கண்களை கண்டு அழுகும்
தொலைக்காட்சி பெட்டி

அன்பு

நாங்கள் உனக்கு சொல்ல
ஆயிரம் வார்த்தைகள் புதிதாய்
நீ எங்களுக்கு சொல்ல
உன் சிரிப்பு மட்டும்

வீரம்

உன் முகத்தில் அச்சம் தவிர்க்க
வானை வீழ்போம்
கண்மணியே

ஆனந்தம்

நீ எங்கள் வாழ்வில்
வார்த்தைகளில்
செய்கைகளில்
இருக்கும் ஒவ்வொரு நொடியும்

தாகம்

2008, திசெம்பர் மாதம் 7ம் தேதி எழுதியது

கைகளில் சிறியளவு நீரோடு
நாவில் விளையாடிய தாகம் தீர்க்கும் முன்
பாதையில் வாடி போன ரோஜா செடிக்கு
நீரூற்றி மனதின் தாகம் தீர்த்த
அந்த பிள்ளையும் ஒரு தாய்

தவறு

2008, திசெம்பர் மாதம் 7ம் தேதி எழுதியது

பிறர் செய்யும் தவறை
திருத்த துடிக்கும் நெஞ்சமே
தன் பிழையை மெய்யாய்
காண மறுத்து அஞ்சுமே