Archive for நவம்பர், 2008

கேள்வி

2008, நவம்பர் மாதம் 29ம் தேதி எழுதியது

நாளை பொழுதிற்க்கு காத்திருந்து
இன்றை கடப்போமா என்ற அச்சம் சூழ
யாரை கேட்டு ஆறுதல் கொள்ள
இந்த நொடிகளில் ஏன் பிழை என்று

கனவுகளும் கவலைகளும்
விடைகளும் விளக்கங்களும்
மாயைகலாய் மாறியது
இந்நோடியும் உயிர் கொண்டு வந்த பின்

வார்த்தைகளில் வாழ்க்கையை கடக்கும் தலைவர்கள்
கடமையை முடித்த பலரின்
அவ்வழியில் வாழ்வையும் முடித்த சிலரின்
தியாகங்களை காக்கும் வார்த்தைகள் எதுவோ

பாவத்திற்கு பதில் சொல்லுமாம்
ஒவ்வொரு உயிரினமும்
செய்த பாவம் எதுவென்று அறியாமல்
கல்லறைகள் நியாயம் கேட்கின்றனவா

மனிதர்கள் இல்லா இந்த சாலையில்
வானை அளக்கும் பறவைகள் நின்று கேட்குமா
மறைந்து போன கனவுகளும்
துளைந்து போன நினைவுகளும்

கோபங்களும் சாபங்களும்
நாட்களால் வீழ்ந்து போகும்
என்று விழித்து கரங்கள் நீட்டுவோம்
திசைகளில் பழிகள் வீசாமல்
தாயின் விழிகளில் ஈரம் துடைக்க

Advertisements

முடிவு

2008, நவம்பர் மாதம் 29ம் தேதி எழுதியது

அறிமுகம் கண்ட நண்பரின்
பலமுகம் அறியாமல்
குழம்பி போன மனதிடம்
எதை புரிந்து முடிவெடுக்கச் சொன்னார்
அறியாத முகத்தை
சில நொடிகள் கண்டு

உணர்வுகள்

2008, நவம்பர் மாதம் 22ம் தேதி எழுதியது

அன்று என்ன நேர்ந்தது…
இதழ்களில் விளையாடிய புன்னகை
இயற்க்கையா செயற்க்கையா…
எப்பொழுது அந்த இரு விரல்கள்
என் தலையை அலங்கரித்தது…
மூலையில் எட்டி பார்த்த
கரங்கள் யாருடையது…
பின் இருந்த கடிகாரம்
நின்றது போல் நினைவு…
தரையில் ஒரு தினசரி
அன்று என்ன தலைப்பு செய்தி…
யார் குடித்து வைத்த தேநீர்
உருண்டிருந்த கோப்பையில்…
துளைந்து போன விவரங்கள் ஆயிரம்
என்றும் துளையாத உணர்வுகள்
இந்த புகைபடத்தில் மட்டும்

தொடு வானம்

2008, நவம்பர் மாதம் 21ம் தேதி எழுதியது

அதோ நெருங்கி விட்ட
வானை தொட ஓடினேன்
வானம் சிரித்தது
என் பாதங்களால் மிதிபட்ட
பூக்களை பார்த்து

விளம்பரம்

2008, நவம்பர் மாதம் 16ம் தேதி எழுதியது

பொருள்…
உடை…
உணவு…
அறிவு…
திறமை…
வெற்றி…
காற்று…
நீர்…
விளம்பரம் வேண்டிய
பட்டியலில் சேர்ந்தது
அன்பு

2008, நவம்பர் மாதம் 16ம் தேதி எழுதியது

சிரிப்போம்
இந்நொடி துளைந்து விடும்
ரசிப்போம்
இந்நிமிடம் கரைந்து விடும்
மன்னிப்போம்
இந்நாள் கடந்து விடும்
நிற்ப்போம்
இக்காலம் ஓடி விடும்
நேசிப்போம்
இவ்வாழ்வு விரைந்து விடும்

வலி

2008, நவம்பர் மாதம் 16ம் தேதி எழுதியது

உன் நினைவுகள்
தந்த வலியைவிட
பெரிதானது
உன்னை நினைவிருக்கிறதா
என்று நீ கேட்ட போது
வந்த வலி

வெற்றி

2008, நவம்பர் மாதம் 15ம் தேதி எழுதியது

இன்று தொட்ட சிகரம்
நாளை தூரம் நகரும்
வெற்றியோர் இலக்கென நம்பி
மீண்டும் காத்திருந்த மணம்
இந்நோடியும் வென்றோம் என உணர்ந்தது
வாழ்வின் நொடிகள் அழகாய் பிறந்தது

அச்சம்

2008, நவம்பர் மாதம் 12ம் தேதி எழுதியது

உண்மையை அஞ்சும் நெஞ்சம்
தன்னிலை நினைத்து தடுமாறும்
அன்பையும் குறையென பழி கூறும்
உலகே சிறையென விதி செய்து
வாழ்வே பிழையென கல்லாகும்

புத்தகம் – I

2008, நவம்பர் மாதம் 8ம் தேதி எழுதியது

நாட்க்களில் அங்கமாகும்
தினசரிகளாய்
வருவார் பலர்
அவ்வப்பொழுது முகம் காட்டும்
இதழ்களாய்
இருப்பார் சிலர்
என்றோ ஒரு நாளில்
தனிமை பொழுதில்
தேடி எடுத்து
சில நிமிடங்கள் படித்து
உயிரில் கலந்து
மனம் மகிழுந்து
நான் ரசிக்கும்
புத்தகம் நீ