மனம் நோகடிக்கும்
மானிடரை
ஒதுங்கிட நேரம்
அறை நொடி போதும்
உயிர் நோகடிக்கும்
உணர்வுகளால்
வருந்திட நிமிடம்
ஆயிரம் கேட்கும்
Archive for ஒக்ரோபர், 2008
நிறம் மாறும் மனம்
2008, ஒக்ரோபர் மாதம் 29ம் தேதி எழுதியதுநம்பிக்கை – I
2008, ஒக்ரோபர் மாதம் 19ம் தேதி எழுதியதுஎழுந்து நில் என
ஆயிரம் முறை
போதித்த மனம்
ஏனோ சில முறை
நம்பிக்கை இழந்து
சரிந்த போது
வலிக்கவில்லை
வலித்தது
சரிந்த மனதை நிமிர்த்த
ஒரு கரம் இல்லை
என்று உணர்ந்த பின்
மழலையின் சிரிப்பு
2008, ஒக்ரோபர் மாதம் 16ம் தேதி எழுதியதுபதிவாகும் என
அறிந்து மலர்ந்தோம்
புகைப்படத்தால்
சிரிப்பிற்க்கு அழகு
எதுவாகும் என
அறியாமல் மலர்ந்தாய்
உன் சிரிப்பால்
புகைப்படத்திற்கு அழகு
இடைவெளி
2008, ஒக்ரோபர் மாதம் 16ம் தேதி எழுதியதுவிண்ணும் மண்ணும்
சேற வழி இல்லை
கண்ணும் கனவும்
சேற நேரம் இல்லை
நிழலும் நிஜமும்
சேற மெய் இல்லை
மனமும் மனமும்
சேற மனம் இல்லை
காத்திரு
2008, ஒக்ரோபர் மாதம் 16ம் தேதி எழுதியதுமழை நின்று
பூமி காய
காத்திருக்க கற்றாய்
விதை வைத்து
பூ பூக்க
காத்திருக்க கற்றாய்
அலை வந்து சென்றால்
மீண்டும் வரும் என
காத்திருக்க கற்றாய்
இரவென்று வாடாமல்
பகலுண்டு என
காத்திருக்க கற்றாய்
கனவொன்று மறைந்தால்
மிகை ஆகும் நாளை
காத்திருக்க கற்பாய் மனமே
மின்னல் – I
2008, ஒக்ரோபர் மாதம் 10ம் தேதி எழுதியதுகாற்று
நிலம்
நீர்
ஆகாயம்
ஒளிந்திருந்த சூரியன்
எட்டி பார்த்த வெண்ணிலவு
யாதும் கண்டு தீர்த்தது
மேகத்தின் பொறியை
காண தயங்கிய
கண்களின் குழப்பம்
முதிர்ச்சி – II
2008, ஒக்ரோபர் மாதம் 9ம் தேதி எழுதியதுகணினியில் கட்டடங்கள் கட்டிய
மகனை கண்டு வியந்தாள் தாய்
அன்றொரு நாள் பிஞ்சு விரல்கள்
செய்த கட்டிடம் கண்ணில் கோபுரங்களாய்
முதிர்ச்சி – I
2008, ஒக்ரோபர் மாதம் 9ம் தேதி எழுதியதுகாற்றோடும் முகிலோடும்
எழுதி வைத்தேன் கனவுகளாய்
கரைந்தோடும் காலம் ஓடும்
அவை இன்றும் கனவுகளாய்
உணவு
2008, ஒக்ரோபர் மாதம் 9ம் தேதி எழுதியதுஉணவால் வளர்ந்து
உணவை மறந்து
உழைக்கும் உடலிலே
உயிரை கரைத்து
உருவம் துளைத்து
நிற்க்கும் மனங்களே
வாத்தியம்
2008, ஒக்ரோபர் மாதம் 6ம் தேதி எழுதியதுவித்வானின் தேவையே
இசையின் மூலமா
பிச்சைக்காரன் தட்டில்
சில்லறை வாத்தியம்