Archive for செப்ரெம்பர், 2008

பயணம்

2008, செப்ரெம்பர் மாதம் 27ம் தேதி எழுதியது

மேகத்தின் கை பிடித்து செல்ல
நதியால் இயலவில்லை
இன்றும் துளிகளால்
தாயிடம் கடிதம் அனுப்பி
தொடரும் மேகத்தின் பயணம்

Advertisements

பனி துளி

2008, செப்ரெம்பர் மாதம் 27ம் தேதி எழுதியது

நேற்று மாலை
நான் கொண்ட வலி
இன்று காலை
இந்த பூக்களில் மட்டும்

அறியாமை – II

2008, செப்ரெம்பர் மாதம் 27ம் தேதி எழுதியது

மேகத்தின் சோகம் அதை
கேட்காமல் ஓடும்
காற்றே நீ அறிவாயா
இதமென பெயர் கொள்வாய்
அந்த கண்ணீர் நின்ற பின்

குழப்பம்

2008, செப்ரெம்பர் மாதம் 27ம் தேதி எழுதியது

எவ்வினை கண்ட பின்
பதறும் மனம் இன்று
என் வினை கண்ட பின்
கதறும் செரி என்று

தேடல் – IV

2008, செப்ரெம்பர் மாதம் 21ம் தேதி எழுதியது

கரையில் காற்று வந்து
மணலை விரட்டிச் சென்றது
கனவை காற்றில் தூது விட்டேன்
ஏனோ கடலில் கரைத்தது

தேடல் – III

2008, செப்ரெம்பர் மாதம் 21ம் தேதி எழுதியது

கனவேது அறியாமல்
நிஜமேது புரியாமல்
திசை நூறில் காற்றை கேள்
ஒரு பூவை அங்கு மறந்ததோ
என் தேடல் எங்கு மறைந்ததோ

தேடல் – II

2008, செப்ரெம்பர் மாதம் 21ம் தேதி எழுதியது

சாவியின் தேவை
கதவின் திறப்பை மறைத்தது
மீண்டும் இருளில்
தேடல் மட்டும் தொடர்ந்தது

தேடல் – I

2008, செப்ரெம்பர் மாதம் 20ம் தேதி எழுதியது

நடந்து போகும் மேகத்தின்
சுவடு மட்டும் மாயமாக
கடந்து போகும் நாட்களில்
கனவு மட்டும் காயமாக

பூ

2008, செப்ரெம்பர் மாதம் 18ம் தேதி எழுதியது

சிரிக்கவில்லை
சிந்திக்கவில்லை
ஒரு சொல் இல்லை
சிறு அசைவில்லை
ஏன் என்று தெறியாமல்
ரசிக்க தூண்டும்
மழலையை போல்
இந்த பூக்கள்

கண்கள்

2008, செப்ரெம்பர் மாதம் 14ம் தேதி எழுதியது

வலி ஏதும் அறியாமல்
கனவுகளை கேட்ட மணதிடம்
இன்றும் மறுப்பு தெரிவித்தது
கணவுகளை தொலைத்த கண்கள்