Archive for ஓகஸ்ட், 2008

வியாபாரம் – I

2008, ஓகஸ்ட் மாதம் 31ம் தேதி எழுதியது

செயற்கை குளிரை சுவாசித்து
வழுக்கும் தரையில் கால் பதித்து
பயிற்சிகளால் இயல்பிழந்த
வாசகங்களை செவித்து
தேடி வந்த பொருளை
தேர்ந்தெடுக்க
அதே பொருளை
சாலையில் வாகனம் நிற்க
வறுமையை சொல்லிய சிறுமி
என் கையை தட்டி
வாங்கச் சொல்ல
தயங்கிய கைகள்
நினைவால் இங்கும் தயங்கியது
அந்த பொருளை தொட

சாலை

2008, ஓகஸ்ட் மாதம் 25ம் தேதி எழுதியது

கண்ணீரை கண்டார் யார்
புன்னகையை கொண்டாட யார்
மனம் விரிந்த திசைகளும்
யார் அறிந்தார்
எதையோ தேடி செல்லும் கடல்
கலக்கும் ஒரு துளியாக
நானும்
இந்த சாலையில்

விடியல்

2008, ஓகஸ்ட் மாதம் 17ம் தேதி எழுதியது

விடியலை கொண்டாடும் நாட்க்களில்
வாழ்வை கொண்டாட தேடுகிறேன்
என் புன்னகைக்கென ஒரு விடியலை

தனிமை – I

2008, ஓகஸ்ட் மாதம் 16ம் தேதி எழுதியது

உணர்ச்சிகள் தெரித்தச் சுவர்
விழுங்கி கொண்டது
உண்மையெனும் ஓவியத்தை

இயற்க்கையின் அவதாரம்

2008, ஓகஸ்ட் மாதம் 8ம் தேதி எழுதியது

கண்கள் காண்பது கனவா என்று சில நொடிகள் எனக்கு சந்தேகம் எழுந்தது.
என்ன அழகான காட்சி அது!

ஒரு மஞ்சள் நிற பூவின் மேல், நிறங்களின் எண்ணிக்கையை இழந்த பட்டாம்பூச்சி.

அந்த மலை மேல் இருந்த மரத்தின் பச்சை நிறம் அழகா? இல்லை அதோடு போட்டி போட்டு அதை மூடிய வெள்ளை பனி அழகா?

வானில் இருந்து இதை கண்ட சூரியனோ, ஒளியை மட்டும் பூமிக்கு கொடுத்து விட்டு, சூட்டை தர மனமில்லாமல் ஒழிந்தே இருந்தது.

இலைகள் மேல் ஓயாமல் விழுந்த மழைத்துளிகள். மழையால் இலை அழகா? இலையால் மழை அழகா? என்ன ஒரு அழகான குழப்பம்!

இப்பொழுது கொஞ்சம் குளிர் காற்று மட்டும் வீசினால் எவ்வளவு சுகமாக இருக்கும்…

ஆனால்…

“அந்த ப்ரோக்ராம்ல ரெண்டு லைன் மாத்த சொன்னேனே செஞ்சியா?”

என் கற்பனையை உடைத்த நண்பனை மனதிற்குள் திட்டிய படியே மூடினேன் அந்த மின் அஞ்சலை.

சோகம்

2008, ஓகஸ்ட் மாதம் 3ம் தேதி எழுதியது

யார் தவறென்று தெறியாமல்
சிறையில் அடைக்க பட்டது
என் கண்ணீர் துளிகள்