Archive for ஜூலை, 2008

காலை 9 மணி

2008, ஜூலை மாதம் 28ம் தேதி எழுதியது

அம்மா ஏன் பதட்டமாக
கையை பிடித்து ஓடுகிறாள்
யோசிக்க நேரம் இல்லாத சிறுமி
மகள் சாலையில்
எதை கண்டு சிரிக்கிறாள்
ஆராய நேரம் இல்லாத தாய்

கடிகாரம்

2008, ஜூலை மாதம் 24ம் தேதி எழுதியது

காணும் போது தாமதமென பெயர்
காண மறந்தால் அவசரமென பெயர்
மணதின் அறியாமையால்
பழி தாங்கும் கடிகாரம்

கணக்கு

2008, ஜூலை மாதம் 22ம் தேதி எழுதியது

சாலையில் நடந்த
நல்லவரின் கணக்கு
பிச்சைக்காரன் தட்டில்

வறுமை

2008, ஜூலை மாதம் 13ம் தேதி எழுதியது

முயற்ச்சிகள் இன்று வாழ்வென
இலக்குகள் நாளை விழிப்பென
வெற்றிகள் ஆறும் பசியென
புன்னகை மட்டும் சுகமென

முகவரி தொலைந்த முகங்கள்
தேசத்தின் முகவரியாக

கண்ணீரும் அழகுதான்

2008, ஜூலை மாதம் 8ம் தேதி எழுதியது

உன் புன்னகையில்
மலர்ந்த பூக்களில்
விழுந்து
அழகானது
என் கண்ணீர் துளிகள்

துரோகம் – I

2008, ஜூலை மாதம் 3ம் தேதி எழுதியது

நீரூட்டி வளர்த்த பூமிக்கு
சேர வேண்டிய மழைத்துளிகளை
பிடித்து கொண்ட இலைகள்