Archive for ஜூன், 2008

கனவு – I

2008, ஜூன் மாதம் 19ம் தேதி எழுதியது

கனவில் கண்ட கவிதை
வானில் விரிய கண்டேன்
வரிகள் அழியவில்லை
வானம் தொலைவில் இல்லை

அறியாமை

2008, ஜூன் மாதம் 7ம் தேதி எழுதியது

எத்தனை தடைகள்
கனவுகள் சொல்லி விட்டால்
வெற்றிக்கு அர்த்தம் போய் விடும்

எத்தனை கண்ணீர் துளிகள்
கண்கள் சொல்லி விட்டால்
கடவுள் மறந்து விடும்

எத்தனை முட்கள்
பாதைகள் சொல்லி விட்டால்
பயணங்கள் நின்று விடும்

எத்தனை நாட்கள்
உறவுகள் சொல்லி விட்டால்
அன்பு கேள்வி ஆகிவிடும்

எத்தனை நொடிகள்
வாழ்க்கை சொல்லி விட்டால்
கனவுகள் அழிந்து போகும்

அறியாமை அது
பிழை என்று சொன்னார்
வாழ்க்கையை அறியாமல்