Archive for மே, 2008

மழை

2008, மே மாதம் 31ம் தேதி எழுதியது

நான் ரசித்த எந்த இசையும்
ஈடாகவில்லை
நீ மண்ணுடன் சேரும் ஒலி
மணதில் செய்த மாயம்

வெடிகளும் அழகாகுமா
நீ சுவற்றில் விழுந்து
வெடித்து சிதறும் போது

உன் புகழை பாடி
எத்தனை கவிதைகள்
என்ன புண்ணியம் செய்ததோ
உன்னை பெற்றெடுத்த மேகம்

இறைவன் வரைந்த கோடுகளாய்
நீ தோன்றும் நேரங்களில்
அதில் எழுதி பார்க்க
இதயத்தில் ஆயிரம் வரிகள்

கோடையில் நீ செல்லபில்லை
உன் செய்கைகளை
சிலர் கோபித்து கொண்டாலும்
உன்னை வெறுக்க
யாருக்கும் மணம் இல்லை

கண்கள் கான ஏங்கும் பயணம் நீ
முடிந்து போகும் போது
ஏனோ மணதில்
ஒரு சின்ன சோகம்

நீ மறைந்தாலும்
நீ தந்த சுகம் மறையாது
மண்ணிலும்
என் மணதிலும்

2008, மே மாதம் 31ம் தேதி எழுதியது

கலைத்து பொய்
வீடு வந்ததும்
கவலையுடன்
சாப்பிட சொல்லும் தாய்
நான் உழைத்து
அவள் கையில்
ஒரு சோறு பதம் கூட
வைக்க முடியாமல் நான்

அநியாயம்

2008, மே மாதம் 31ம் தேதி எழுதியது

என்ன ஒரு அநியாயம்
பேருந்தில் தூங்குபவனுக்கு
ஜன்னலோரம்

மன்னிப்பு

2008, மே மாதம் 31ம் தேதி எழுதியது

கம்பீரமாய் நின்றது
புகையால்
களங்கம் செய்த பூமியை
மன்னித்து விட்ட வானம்