Archive for மார்ச், 2008

தருணங்கள

2008, மார்ச் மாதம் 13ம் தேதி எழுதியது

எதிர்பாராமல் வரும் பாராட்டு…

நண்பர்கள் தரும் இன்ப அதிர்ச்சி…

மாலை பொழுதில்
தென்றல் வருடும் போது
தோழிகளுடன் பேசிக்கொண்டு
கவலை மறந்து சிரிக்கும் தருணம்…

பயிற்சி நேரத்தில்
கல்லூரியின் நினைவுகளை
கொண்டு வரும் நாட்கள்…

திடீரென்று அறிவித்த விடுமுறை…

தாமதம் ஆகும் என
பயந்து வந்து
இல்லை என்று தெரியும் பனி…

நாள் முழுவதும்
நான்கு சுவர்களுக்குள் இருந்து
வீடு திரும்பும் நேரத்தில்
பிரமித்து பார்க்கும் வானம்…

செய்யும் வேலையை நிறுத்தி விட்டு
நண்பர்களுடன் அடிக்கும் சின்ன அரட்டை…

வேலையில்லாமல் இருக்கும் நேரத்தில்
நம்மை நினைத்த ஒருவர்
அனுப்பும் மின் அஞ்சல்…

வேலையே அழுத்த நேரத்தில்
பல நாட்கள் பெசிடாத
தோழியின் தொலைபேசி அழைப்பு…

மேலாளர் இல்லாத நேரத்தில்
திருடிக்கொள்ளும் சின்ன தூக்கம்…

யார் கேட்பாரென
தேநீர் அருந்தி விட்டு
தாமதமாக இருக்கைக்கு வரும் நேரம்…

வேலை விஷயத்தில் துடங்கி
சிரிப்பில் முடியும் உரையாடல்கள்…

இவைதானே
கணிபோரிகளின் முகங்கள் சலித்து போய்
இன்பம் தேடும் நெஞ்சங்களுக்கு
விலைமதிப்பில்லா தருணங்கள்

Advertisements

கதவுகள்

2008, மார்ச் மாதம் 1ம் தேதி எழுதியது

அன்பு நுழைய
மணதின் கதவுகளை
திறந்து வைத்தேன்…
புண் செய்யும்
ஒரு வார்த்தை நுழைந்து
என் சிரிப்பை திருடிச் சென்றதேன்