Archive for ஜனவரி, 2008

பயணம்

2008, ஜனவரி மாதம் 25ம் தேதி எழுதியது

ரயிலில் உறக்கம் இன்றி
தவித்துகொண்டிருந்த கண்கள்
அந்த ஐந்து நிமிட நிறுத்தத்தில்
ஜன்னலோரம் சென்றது

அங்கே
உலகம் மறந்து
கவலை மறந்து
உறங்கும் பிச்சைக்காரன்

ஏனோ சில நொடிகளில்
உறக்கம் கண்களை வருடியது

நாளை என் இடம் நான் அறிவேன்
அவன் அடுத்த சோற்று பதம் யார் அறிவார்

குறை

2008, ஜனவரி மாதம் 25ம் தேதி எழுதியது

அழகு என்றும் குறையவில்லை
குறை ஒன்றும் வரவில்லை
மனம் சுமக்கும் குறையை
கண்கள் தாங்கிக் கொண்டால்
சிறு புல்லையும் விஷம் என்று சொல்லும்

கலப்படம்

2008, ஜனவரி மாதம் 25ம் தேதி எழுதியது

பாசமான தாயின் முகத்தில்
பெருமை படும் தந்தையின் முகத்தில்
பிரியமான ஒரு தோழியின் முகத்தில்
பிழையேதும் அறியாத குழந்தையின் முகத்தில்
ஏதோ ஒரு பொழுதில்
உதவிய அந்த யாரோ ஒருவரின் முகத்தில்
மனதில் இருக்கும் அழகை சொன்ன
அந்த மென்மையான புன்னகை…
அதிலும் இன்று கலப்படம் செய்துவிடார்களே –
சுயநலவாதிகள்!

காத்திருக்கவில்லை

2008, ஜனவரி மாதம் 25ம் தேதி எழுதியது

சேவல் வரும் என்று
சூரியன் காத்திருக்கவில்லை
சூரியன் இறங்கும் என்று
நிலவு காத்திருக்கவில்லை
மின்னல் வரும் என்று
மழை காத்திருக்கவில்லை
வேர் வளரும் என்று
நீர் காத்திருக்கவில்லை
தவறை திருத்திக் கொள்ள
காலம் காத்திருக்கவில்லை
செரியா தவற என்று அறியும் வரை
மனம் காத்திருக்கவில்லை
வாழ்வில் என்றோ ஒரு நாள்
ஆனந்தம் வரும் என்று
நீ மட்டும் எதை தேடி
காத்திருந்தாய்?

பொய்

2008, ஜனவரி மாதம் 25ம் தேதி எழுதியது

அறியாதது பொய் என்றும்
புரியாதது பிழை என்றும்
கதறும் மனமே
காற்றின் ஒரு துளியை கன்டாயோ

உயிர் தரும் சக்தி அதை
கண்கள் அறியவில்லை
உனக்கும் புரியவில்லை
அதை மட்டும் பொய்யென
மறுக்க மறந்தாயோ

நேரமில்லை

2008, ஜனவரி மாதம் 22ம் தேதி எழுதியது

ஆயிறக் கணக்கில் தத்துவங்கள்
கேட்டு பழக சில நொடிகள்
சொல்லி காட்ட பல நொடிகள்
ஆனால் அதை வாழ்ந்திடத்தான்
ஏனோ நேரமில்லை நமக்கு

பேச்சு – I

2008, ஜனவரி மாதம் 12ம் தேதி எழுதியது

பேச்சு

செய்தித்தாழ் புரட்டி
ஐந்து நிமிடம்
நாங்கு நண்பர்கள்

மேலாளரை திட்டி
நாங்கு நிமிடம்
மூன்று நண்பர்கள்

இன்று கேட்ட புறளீ
மூன்று நிமிடம்
இரண்டு நண்பர்கள்

மணதில் இறுக்கும் வலி
நாள் முழுவதும்
நான் மட்டும்