Archive for பிப்ரவரி, 2007

மழைத்துளி

2007, பிப்ரவரி மாதம் 25ம் தேதி எழுதியது

துளியே
நீ வானில் தோன்றிய நொடி
என் கண்ணில் தோன்றியது
உன் துணையொன்று
மண்ணில் கறையும் முன்
நீயாவது வருவாயா
அதை அழைத்துச் சென்று
என் கன்னம் துடைக்க?

இயற்க்கை

2007, பிப்ரவரி மாதம் 17ம் தேதி எழுதியது

மண்ணை இருள் சூழ்ந்த பின்்
இயற்கையின் அழகு மறைந்து விடுவதில்லை
சந்திர ஒளியில் தெரியாத அழகை
கண்கள் காண மறுப்பது
இயற்கையின் தவறா?
கண்களின் தவறா?