Archive for ஜனவரி, 2007

இறைவன்

2007, ஜனவரி மாதம் 26ம் தேதி எழுதியது

நடுங்க வைக்கும் பணியில்
முட்டி மோதிக்கொண்டு
இறைவனின் தரிசனம் வாங்க
கால் வலிக்க நிற்க்கும்்
பக்தர்கள் அறியவில்லை
அந்த நெரிசலிலும்
எங்கேயோ பார்த்து கொண்டு
சிரிக்கும் குழந்தையின் கண்களில்
ஒளிந்து இருந்தான் இறைவன்


மனம்

2007, ஜனவரி மாதம் 26ம் தேதி எழுதியது

பிறர் நிலை கண்ணில் பட்டதில்
மனம் தானாக சொல்லிய ஆறுதல்
அந்நிலை தன்னை சுட்டதில்
அறிந்தும் அறியாமல் போனதேனோ

கண்ணீர

2007, ஜனவரி மாதம் 26ம் தேதி எழுதியது

கண்களில் தோன்றும்
ஒரு சின்ன துளிக்குள்
எத்தனை எத்தனை வார்த்தைகள்
அதில் எத்தனை எத்தனை அர்த்தங்கள்
உலகம் தெரியாத விழிகளும் சொல்லும்
மனங்களில் மொழிகள்
இரு துளிகளில்