Archive for ஓகஸ்ட், 2006

தோழி

2006, ஓகஸ்ட் மாதம் 5ம் தேதி எழுதியது

வாழ்கையில் பட்ட காயங்கள் ஆற
என் மனதில் நான் கட்டி வைத்தேன்
ஒரு கண்ணாடிச் சுவர்

சுவரை உடைத்து
நேசத்தின் காற்றை
உள்ளே வீச செய்தாய்

மனம் அழுத போதும்
அருகில் நீ இல்லாமல் போனாலும்
உன் நினைவே ஆறுதல் ஆனது

தாயை எண்ணாத நாட்களும் உண்டு
உன்னை எண்ணாத நாட்கள் இல்லை

உன் மனம் நான் அறிய
என் மனம் நீ அறிய
வார்த்தைகள் எதற்கு தோழி
நம் நட்பை உலகறிய?

Advertisements