Archive for ஏப்ரல், 2006

இட ஒதுக்கீடு

2006, ஏப்ரல் மாதம் 28ம் தேதி எழுதியது

முயற்சி இருந்தால்
உலகை வெல்லலாம்
இது பள்ளியில் சொல்லிய பாடம்

காணவில்லை

2006, ஏப்ரல் மாதம் 27ம் தேதி எழுதியது

ரோட்டோரம் நடக்கும் பொது
கண்ணோரம் ஒரு நீர் துளி
வாழ்கையில் தனியாக செல்வதை ஒரு கவலை
நடந்து சென்ற பாதையில்
பூ விற்று வந்தால் ஒரு பெண்
அவள் கால்களை காணவில்லை
அவள் உறுதியை கண்டு
ஏனோ என் கண்நோரத்தில் இருந்த
அந்த நீர் துளி காணவில்லை

உணர்ச்சிகள

2006, ஏப்ரல் மாதம் 27ம் தேதி எழுதியது

கண்ணீர்…
புன்னகை…
ஆனந்தம்…
சோகம்…
அதிர்ச்சி…
ஆச்சர்யம்…
அன்பு…
பாசம்….
காதல்…
வாழ்வை உணரவே
கடவுள் தந்த பரிசு – உணர்ச்சிகள்
அதை உணராமல்
எங்கோ சென்று
வாழ்க்கையின் அர்த்தத்தை தேடுகிறான் – மனிதன்

கனவுகள

2006, ஏப்ரல் மாதம் 26ம் தேதி எழுதியது

கண்களின் கனவுகள்
கண் முன் வந்தது
பூக்கள் மலர்ந்தன
மனதிலே

பூக்களை வளர்க்க
நீர் ஊற்றும் முன்
வாடி விழுந்தன
தரையிலே

பூக்களில் பனித்துளி காய்ந்தாலும்
கண்களில் நீர் துளி காயுமா?

கனவுகள் பல மாறினாலும்
மனதின் காயங்கள் ஆறுமா?

எத்தனை எத்தனை நதிகள்
அதில் எத்தனை எத்தனை துளிகள்
துளி திரும்பும் திசையே நதிக்கு

எத்தனை எத்தனை செடிகள்
அதில் எத்தனை எத்தனை இலைகள்
செடி சாயும் திசையே இலைக்கு

துளியாய் இருந்த நான்
இலையாய் மாறி போனேன்
மீண்டும் துளியாக ஆசை
முடியவில்லை

பறக்க நினைக்கும் பறவைக்கு
சிறகுகள் வலிக்கலாம்
பறக்க வேண்டும் –
இன்னும் உள்ளதே தூரம்

மறக்க நினைக்கும் மனதிற்கு
நினைவுகள் பாரமாகலாம்
மறக்க வேண்டும் –
இன்னும் உள்ளதே வாழ்க்கை

மனம் பறவையாய் பறக்க
பாரங்களை இறக்கி வெய்த்தேன்
வாழ்க்கையின் தூரத்தை
கடப்பதற்காக


வணக்கம்

2006, ஏப்ரல் மாதம் 15ம் தேதி எழுதியது

என் வலயதலதிர்க்கு வருகை தந்திருக்கும் என் அருமை தமிழ் தோழர்/தோழிகளுக்கு வணக்கம்

இந்த இனிய ஆண்டின் தொடக்கத்தில் நான் எடுக்கும் ஒரு புதிய முயற்சி…
வழக்கமாக ஆங்கிலத்தில் எழுதும் நான், சில விஷயங்களை மிக ஆழமாக உணரும் பொது என் தாய் மொழியான அழகு தமிழுக்கு மாறுகிறேன். அப்படி நான் உணர்வதை உங்கள் கண் முன் கொண்டுவருவதற்காகவே இந்த ‘மௌனம் பேசுகிறதே’.

படிப்பவர்களுக்கு ஒரு சின்ன எச்சரிக்கை… நான் தமிழை முறையாக கற்க்கவில்லை. எனக்கு சின்ன வயதில் தமிழ் படிக்க கூட தெரியாது. புத்தகங்களை படித்து கற்று கொண்டவள் நான். அதனால் என் எழுத்தில் சில (பல?) பிழைகள் இருக்கலாம்.

பிழைகளை எனக்கு அடையாளம் காட்டுங்கள் அதை நான் வரவேற்கிறேன். ஆனால் அதே சமயம், அதை பெரிய பிரச்சனையாக கருதாமல் என் எழுத்தில் உள்ள அர்த்தங்களையும் படியுங்கள்.

நன்றி!