வானின் வண்ணங்கள்
மாற்றம் காணும் தருணங்கள்
தெரியாமலே போவதைப்போல்
சில பயணங்களும் சில தருணங்களில்
தெரியாமலே முடிந்து விடுவதுண்டு
முடிந்து போன பாதைகளை
தேடி ஓடாதீர்கள்
அங்கே காத்திருப்பது
சுவடுகள் மட்டுமே
2011, செப்டம்பர் மாதம் 23ம் தேதி எழுதியது
நேர்மை
2011, செப்டம்பர் மாதம் 17ம் தேதி எழுதியதுஉடைந்த போதும்
மேகங்கள்
திசை மாற்றி போவதில்லை
முகவரி
2011, செப்டம்பர் மாதம் 6ம் தேதி எழுதியதுசாலையோரம்
முகவரி தொலைத்த முகங்கள்
புன்னகையில் மலரும் பொழுது
தெரிகிறது
மகிழ்ச்சியின் முகவரி
தடங்கல்
2011, செப்டம்பர் மாதம் 2ம் தேதி எழுதியதுஇலையில் சிக்கி தவிக்கும்
துளிக்கு தெரியாது
இன்னும் சில நொடிகள்
கரையாமல் வாழ்வோம் என்று
சுதந்திரம்
2011, ஜூலை மாதம் 16ம் தேதி எழுதியதுகனவு கொண்டேன் என்றால்
கணவனை பற்றியா என்று
வருகிறது கேள்வி
இப்படியாக
பெண் சுதந்திரம்!
திடீர் மழை
2011, ஜூலை மாதம் 2ம் தேதி எழுதியதுகுடை வைத்திருந்தவர்கள்
புத்திசாலிகள்
குடை இல்லாதவர்கள்
அதிர்ஷ்டசாலிகள்!
2011, ஜூன் மாதம் 22ம் தேதி எழுதியது
உங்கள் காட்சிப்பிழைக்கு
பலியாகும் நாங்கள் வாழ
கேட்டு நிற்கிறோம்
உங்கள்
ஒரு நொடியை மட்டும் -
அழகில்லாத உலகம்
காலம்
2011, ஜூன் மாதம் 22ம் தேதி எழுதியதுஎன்றும் விடியும் இன்றொன்றில்
நாளை என்பது வினாவே
அதை தேடி ஓடும் உன் காலங்களும்
நேற்றானபின் கனாவே
காட்சி
2011, ஜூன் மாதம் 15ம் தேதி எழுதியதுநிகழ்வது உன் விழியில்
நிகழ்ந்த பின் அதற்குள்
கணவாய் சென்று மறையாதா
இன்னொரு விழியில்
மெய்யல்ல நீயும்
கணவாய் மறைவாய் தெரியாதா